மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா…
இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம் என்று கூறலாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதனை சீத்தலைச் சாத்தனார் இயற்றி இருக்கிறார்.
இதனை இரட்டைக்காப்பியம் என அழைக்க காரணம் சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இந்த காப்பியத்தில் காப்பிய தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் தான் இந் நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது.
தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் என்று இந்த மணிமேகலையை கூறலாம். மேலும் இந்நூலில் பௌத்த மத நீதிகள் அதிக அளவு கொட்டி கிடைக்கிறது.
இந்த மணிமேகலை கோவலன், மாதவி தம்பதியின் மகள் ஆவார். மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட இவள் துறவி ஆக வேண்டும் என்று எண்ணிய போது இவளை தொடர்ந்து வந்த சோழ மன்னனை, விடுத்து துணிச்சலுடன் துறவு பூண்ட கதை தான் மணிமேகலை.
இந்த காப்பியத்தில் கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை மிக முக்கியமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடமும் அன்போடு நடக்க வேண்டும் என்ற உண்மை கோட்பாடு உணரும்படி சொல்லப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சிறைச்சாலைகள் அனைத்தும் அறச்சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள மணிமேகலை அமுது சுரபி என்ற பொருளைக் கொண்டு அனைவரது பசியையும் நீக்கியது இந்த காப்பியத்தின் ஹைலைட் என்று கூறலாம்.
தமிழில் பழம்பெறும் நூலாக கருதப்பட்ட தொல்காப்பியம், அதை எழுதிய தொல்காப்பியர் பயன்படுத்திய எட்டு அணிகளுடன், மடக்கணி, சிலேடை அணி ஆகிய இரண்டும் இந்த காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தனி சிறப்பாக உள்ளது.
மணிமேகலை என்ற இந்த காப்பியத்திற்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அவை மணிமேகலை துறவு, முதல் சமய காப்பியம், அற காப்பியம், சீர்திருத்த காப்பியம், புரட்சி காப்பியம், பசிப்பிணி மருத்துவ காப்பியம், பசு போற்றும் காப்பியம், துறவு காப்பியம் என்பதாகும்.
இந்தக் காப்பியத்தில் மொத்தம் 30 காதைகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது நிலைமண்டில ஆசிரியப்பாவை கொண்ட ஒரு பௌத்த சமய நூலாகும். எனினும் நூலில் காண்ட பிரிவுகள் எதுவும் இல்லை.
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்த காப்பியம் ஆனது மணிமேகலையின் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள அவள் பட்ட இன்னல்களையும் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1 Comment
அழகான பதிவுகள். வாழ்த்துக்கள் தோழரேm
Comments are closed.