• December 14, 2024

ஆடி அமாவாசை பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? – அட இதெல்லாம் செய்யக் கூடாதா..

 ஆடி அமாவாசை பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? – அட இதெல்லாம் செய்யக் கூடாதா..

aadi amavasai

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான நாட்களில் ஒன்றான ஆடி அமாவாசை பற்றி சாத்திரம் என்ன சொல்கிறது. இந்த நாளில் நாம் எதை செய்ய வேண்டும். எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற உண்மையான கருத்துக்களை இந்த கட்டுரையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 

இதன் மூலம் இந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

aadi amavasai
aadi amavasai

தமிழர்களின் வரலாற்றில் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் எந்த அமாவாசை அன்று நீங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற சந்தேகங்கள் இருக்கலாம்.

 

நமது சாஸ்திரத்தில் இரண்டு அயனத்தைக் கொண்டதை ஒரு வருடம் என்று கூறுகிறோம். அதாவது ஆறு மாதத்தைத் தான் ஒரு அயனம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

 

அந்த வகையில் அமாவாசையில் மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. அதில் குறிப்பாக தை மாதத்தில் வருகின்ற அமாவாசை உத்திராயண காலகட்டத்தில் ஏற்படுவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அடுத்து ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தட்சணாயன காலத்தில் ஏற்படுவது, புரட்டாசி மாதத்தில் ஏற்படுகின்ற அமாவாசையை மகாளய பச்சம் என்று கூறுகிறோம். இந்த மூன்று அமாவாசைகளுமே ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

aadi amavasai
aadi amavasai

தமிழ் மாதங்களில் ஆடி முதல் மார்கழி வரை உள்ள மாதத்தில் நம்முடைய இறந்து போன முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக இந்த பூலோகத்திற்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

 

அப்படி அவர்கள் பூலோகத்தை நோக்கி பயணப்பட்டு வருகின்ற முதல் நாள் தான் ஆடி அமாவாசை. இவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து நம்மை பார்ப்பதற்காக கிளம்பி வருகிறார்கள்.

 

எனவே நமது இறந்து போன முன்னோர்களைப்  நாம் நினைவில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை வணங்கி இந்த பூலோகத்திற்குள் வந்து நம்மை ஆசீர்வாதம் செய்ய, அவர்களுக்கு கட்டாயம்  தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.

 

ஆடி மாதத்தில் நம்மை பார்க்க வரக்கூடிய பயணத்தை ஆரம்பித்த நம் முன்னோர்கள் இந்த பூலோகத்திற்கு புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை நாளன்று வந்து சேர்வதால் அந்த சமயத்திலும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 

பின்னர் அந்த முன்னோர்கள் மீண்டும் பித்ருலோகத்தை நோக்கி செல்லக்கூடிய மாதம் தான் தை மாதம். இந்த தை அமாவாசை அன்றும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

 

எனவே ஆடி மாதம் பயணத்தை ஆரம்பித்து தை மாதம் தங்களது இடத்தை நோக்கி செல்லும் முன்னோர்களை வழியனுப்பும் விதமாக இந்த தர்ப்பணம் அமையும்.

 

பொதுவாகவே சூரியனோடு, சந்திரன் இணைந்து இருக்கக்கூடிய நாளே அமாவாசை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாளில் நம் முன்னோர்கள் ஆகிய தாத்தா,பாட்டி, தாய் தந்தையர்களை யார், யார் வழிபடுகிறார்களோ, அவர்களது பிள்ளைகளுக்கும், வரக்கூடிய தலைமுறைக்கும் பித்ருகளின் ஆசீர்வாதம் கட்டாயம் கிடைக்கும். இதன் மூலம் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைந்து பலவிதமான நன்மைகளை அந்த குடும்பத்தைச் சார்ந்த நபர்களுக்கு தருவார்கள்.

 

மேலும் தொடர்ந்து பித்ருகளுக்கு தர்ப்பணம் தருவதின் மூலம் அவர்கள் இல்லத்தில் சுபிட்சம் மகிழ்ச்சி நிலவும். பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்களுக்கு இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி, எள்ளும், தண்ணீரும் கொடுத்து வரவேற்பதின் மூலம் சகல விதமான பாவங்களும் நீங்கி, சகல சம்பத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

aadi amavasai
aadi amavasai

இந்த தினத்தில் நீங்கள் எல்லாவிதமான பொருட்களையும் தானம் செய்யலாம். குறிப்பாக அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் உங்களுக்கு ஆயுள் விருத்தி அதிகரிக்கும். தோஷங்கள் விலகும் தடைகள் நீங்கும்.

 

அது போலவே அன்னதானம் செய்வதின் மூலம் சகல வியாதிகளும் நீங்கும். முன்னோர்களுக்கு நீங்கள் படையல் இட்டு வழிபட்ட பின்னர் அந்த உணவை ஏழைகளுக்கும், பசியோடு தவிப்பர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முன்னோர்களின் பூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

 

அமாவாசை தினத்தன்று நீங்கள் உங்கள் வீட்டில் கோலம் போடக்கூடாது. அசைவம் சமைக்க கூடாது என்பதை உறுதியாக கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இரண்டு அமாவாசை வந்தால் இரண்டாவதாக வருகின்ற அமாவாசை தினத்தில் தான் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது உகந்ததாக இருக்கும். இந்த தினத்தில் நீங்கள் ராமேஸ்வரம், தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு செல்லலாம்.

 


1 Comment

  • அருமையான விளக்கம். நன்றி

Comments are closed.