• November 21, 2024

சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த காரணம் என்ன? – விலகும் மர்மங்கள்..

 சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த காரணம் என்ன? – விலகும் மர்மங்கள்..

XUAN ZANG

சீனப் பயணியான யுவான் சுவாங் பற்றி நீங்கள் வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். இவர் 17 ஆண்டு பயணம் செய்து இந்தியாவில் பல பகுதிகளை சென்றடைந்திருக்கிறார்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்திருந்தார்கள். இதற்கு காரணம் திருடர்கள், எதிரிகள், பிற மதத்தவர்கள் என்று பலரும் இங்கு இருந்த காரணத்தினாலும், இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்ந்ததாலும், அபாயகரமான பயணத்தை பலரும் தவிர்த்த நிலையில் யுவன்சுவாங் மற்றும் தைரியத்தோடு இந்திய பயணத்தை மேற்கொண்டார்.

XUAN ZANG
XUAN ZANG

மிகச்சிறந்த புத்த துறவியான யுவான்சுவாங் (XUAN ZANG) பல மொழிகளை கற்று அறிந்தவர். அத்தோடு தான் படித்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்து வைத்த அற்புதமான ஆளுமை பொருந்தியவர்.

62 ஆம் ஆண்டு பிறந்த இவர் புத்த புத்தகங்களைப் பற்றி ஆழமாக கற்று அறிந்ததோடு, புத்த துறவியாக மாற வேண்டும் என்பதை இளம் வயது முதற்கொண்டு தனது இலட்சியமாக கொண்டிருந்தவர். மேலும் புத்த மதத்தில் காணப்படும் இரண்டு பிரிவுகளையும் ஆழமாக கற்றறிந்தார்.

தனது இருபதாவது வயதில் முழுமையான ஞானத்தை அடைந்த இவர் சீனாவில் பல இடங்களில் பயணம் செய்து புதிய புத்த கருத்துகளை சேகரித்தார். இந்த நிலையில் தான் புத்த மதம் குறித்த முரண்பாடான தரவுகள் சீனாவில் உள்ளது என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.

இதற்குக் காரணம் புத்தரின் உருவம் ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு மாதிரியாக இருந்ததின் காரணத்தால் பலவிதமான மர்மங்களும் கருத்துக்களும் மக்களிடையே நிலவியது.

XUAN ZANG
XUAN ZANG

இந்த மர்மங்களை விலக்க வைத்த மாபெரும் மகானாக யுவான்சுவாங் திகழ்கிறார். புத்த மதத்தில் இருக்கும் அத்தனை முரண்பாடுகளையும் விலக இவர் காரணமாக இருந்தார் என்று கூறலாம். அதற்குக் காரணம் புத்தர் பிறந்த இந்தியாவிற்கே வந்து அவர் சம்பந்தமான கருத்துக்களை திரட்ட இவர் திட்டமிட்டார்.

எனினும் இவரது இந்திய பயணத்தை யாரும் விரும்பவில்லை. எனவே தனியாக பயணம் மேற்கொள்வது என்ற முடிவை இவர் எடுத்து இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல் மற்ற இடங்களையும் சமாளிக்க மன உறுதி பூண்டார்.

இவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இவரை போல பாகியான் என்ற ஒருவர் இந்தியாவிற்கு வந்து புத்த மதத்தை பற்றி கற்று இருக்கிறார். அவரைப் பற்றியும் இவர் விரிவாக படித்து அறிந்து கொண்டார்.

மேலும் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புத்தகங்களை கற்க வேண்டுமெனில் நிச்சயமாக சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். எனவே சமஸ்கிருத மொழியையும் அவர் கற்றறிந்தார். 629 இல் இந்திய பயணத்தை யுவான் சுவாங் துவங்கினார்.

XUAN ZANG
XUAN ZANG

இந்தப் பயணத்தில் இவர் சீனாவில் இருந்து கோபி பாலைவனம், பிளேமிங் மலைகள், பிடல் கணவாய், பட்டு வழி சாலை, பாம்யான் மலைகள், சைபர் கணவாய் ஆகியவற்றைக் கடந்து காந்தார நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

இதனை அடுத்து அங்கிருந்த பல ஊர்களை சுற்றி பார்த்துவிட்டு அதினப்பூர் வந்தபோது இந்தியா வந்து விட்டதாக கருதினார். மேலும் ஹைபர் கணவாய் வழியாக இன்றைய பெஷாவார் பள்ளத்தாக்குகளை கடந்து சிந்து நதியை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்தார்.

இந்தப் பகுதிகளில் இருந்த பல புத்த மடாலங்களுக்குச் சென்று புத்த பிச்சுகளை சந்தித்து ஆசி பெற்ற இவர் 633 காஷ்மீருக்குள் வந்திருக்கிறார். மேலும் காஷ்மீரில் இருந்து காஞ்சிபுரம் வரை உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று புத்தர் பற்றிய தேடுதலில் ஈடுபட்டு அவற்றைப் பற்றிய குறிப்புகளை சேகரித்துக் கொண்டார்.

காஞ்சிபுரத்தில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோவிலில் இன்றும் யுவான் சுவாங் சிலை உள்ளது. இவர் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல நூல்களை கற்று பல கருத்துக்களை அறிந்து கொண்டார்.

XUAN ZANG
XUAN ZANG

அதுமட்டுமல்லாமல் காஞ்சியில் இருந்து சொந்த நாடான சீனாவுக்கு திரும்புவதற்கு ஹைபர் கணவாய் வழியாக 645 இல் செங்கான் நகரத்தை அடைந்தார். மேலும் இவர் இந்தியாவிலிருந்து பல சமஸ்கிருத புத்தகங்களை தன்னோடு எடுத்துச் சென்று சீன மொழிக்கு அதை மொழி பெயர்த்தார்.

மேலும் தான் மேற்கொண்ட பயணத்தை ஒரு நூலாக எழுதி இருக்கிறார் யுவான் சுவாங். இவரது ஒப்பற்ற தேடலில் புத்த மதத்தைச் சார்ந்த பல மர்மமான விஷயங்களுக்கு விடை கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் ஏழாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப் பகுதி எப்படி இருந்தது என்பதை இவர் எழுதிய நூலை படித்தாலே அனைவருக்கும் விரிவாக தெரியவரும். இந்தியா மட்டுமல்லாது இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளை சுற்றிய அற்புதமான பயணி என்று கூறலாம்.