“நரகத்திற்கான கதவு துர்க்மெனிஸ்தான்..!”- மறைந்திருக்கும் மர்மம்..
இந்தப் பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களை தனக்குள் மறைத்து வைத்துள்ளது. எவ்வளவு தான் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் நாம் வளர்ந்து இருந்தாலும் அத்தகைய மர்மங்களை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறோம்.
அந்த வகையில் உலகம் முழுவதும் சில மர்மமான இடங்கள் உள்ளது. அவற்றின் பின்னணி என்ன என்பது என்று வரை கண்டுபிடிக்க முடியாமல் தனித்தன்மையோடு விளங்குகிறது.
அந்த வரிசையில் துர்க்மெனிஸ்தான் பகுதியில் ஓர் இயற்கை எரிவாயு வெளியேறும் எரிமலை போன்ற ஒரு அமைப்பு இருந்தது. இந்த அமைப்பில் இருந்து மீத்தேன் வாயு தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இந்த மீத்தேன் வாயுவானது எப்படி இந்த பகுதியிலிருந்து வெளி வருகிறது. அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது புவியியலாளர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. எனினும் அதை தீ வைத்து அவர்கள் எரித்தனர்.
தீ வைத்து எரித்த அந்த தீயானது இன்று வரை கொழுந்து விட்டு எரிந்த வண்ணமே உள்ளது. இந்த தீயை அணைத்த பாடு இல்லை. எனவே தான் இந்தப் பகுதியை மக்கள் அனைவரும் நரகத்தின் கதவு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
இன்று வரை கட்டுக்குள் கொண்டு வர முடியாத இந்த தீயை யாரும் இதுவரை எப்படி இப்படி ஆனது என்று பகிர முடியாமல் உள்ளது. மேலும் நமது தொழில்நுட்பத்திற்கும் அறிவியலுக்கும் சவால் விடும்படியாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.
பலமுறை போராடியும் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியும் கட்டுக்குள் கொண்டு வர முடியாத தீயை மக்கள் அனைவரும் நரகத்தின் கதவு என்று அழைப்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
இதுபோலவே நெவாடாவில் உள்ள வண்ணமயமான நீர் ஊட்டும் இயற்கை அதிசயமாகவும், மர்மமாகவும் இருக்கக்கூடிய ஒன்று. மேலும் இந்த நீர் ஊற்று உருவான விதம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று என்று கூறலாம்.
பாலைவனப் பகுதியாக இருக்கும் இங்கு இருபதாம் நூற்றாண்டில் நீர்ப்பாசனம் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்று கருதிய மக்கள் அங்கு ஓர் கிணற்றை தோன்றினார்கள். சுமார் 200 டிகிரி அளவு வெப்ப நிலையில் இருந்த காரணத்தால் அந்த கிணறை அப்படியே விட்டு விட்டார்கள்.
இதனை அடுத்து பல நூற்றாண்டுகளுக்கு மேலாக சூடான நீர் தொடர்ந்து, இந்த கிணற்றில் வெளியேறியதின் காரணத்தால் கால்சியம் கார்பனேட் படிவு ஏற்பட்டு படிப்படியாக ஒரு கூம்பு போன்ற அமைப்பை இது உருவாக்கியது.
இதனை அடுத்து 1964ஆம் ஆண்டு எரிசக்தி நிறுவனம் மீண்டும் ஒரு கிணறை அந்த பகுதியில் தோன்றிய போது இதே நிலை ஏற்பட்டு கைவிட்டது. இந்த கிணறு மூடப்பட்டாலும் நீரின் அழுத்தத்தை தாங்கக்கூடிய வலு இல்லை.
எனவே நீர் வேறு வழிகளில் வெளியேறத் துவங்கியது. இதனை அடுத்து அதில் இருக்கும் வேதிப்பொருட்களின் தன்மை காரணமாக இங்கிருக்கும் நீர் வண்ணமயமான தோற்றத்தை கொடுத்தது. இது போன்ற உலகின் மர்மங்கள் தீர்க்கப்படாத மர்மங்களாக இன்று வரை உள்ளது.