“மரணத்தை மட்டுமே பரிசாக தரும் தீவு..! – மனிதர்களுக்கு நோ என்ட்ரி போட்ட அரசு..
எவ்வளவுதான் உலகில் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், இன்னும் தீர்க்க முடியாத மர்மம் நிறைந்த முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வரிசையில் சுமார் 1.60 லட்சம் மக்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நிலையில் இன்று அங்கு ஆவியாய் உலாவுவதால், எந்த மனிதர்களும் அந்தப் பகுதிக்குச் சென்றால் உயிருடன் திரும்ப வர முடியவில்லை என்பதால் டூரிஸ்ட் களுக்கு அரசு அத்தீவுக்கு செல்ல தடை விதித்துள்ளது. இந்த விஷயம் கேட்டால் உங்களுக்கு திகில் கலந்த பயம் ஏற்படும்.
இத் தீவானது இத்தாலியின் “போவெக்லியா” (POVEGLIA) தீவு தான். மேலும் இத் தீவானது பெனிஸ் மற்றும் டிடோவுக்கு இடையை அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த நிலப்பரப்பு கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.
எனினும் தீவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே செல்ல முடியும். வேறு யாரும் இந்த பகுதிக்கு செல்ல முடியாது. இதற்குக் காரணம் 1920 களில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக இந்த தீவு இறக்கி விடப்பட்டன.
அப்படி இறக்கி விடப்பட்ட மக்கள் அனைவரும் அந்த நோயின் தாக்கத்தால் அங்கு இறந்து விடவே பிரம்மாண்டமான புதைக்குழிகளை உருவாக்கி அங்கே அவர்களை அடக்கம் செய்தார்கள்.
மேலும் இந்த நோயின் தாக்கம் பரவாமல் இருப்பதற்காக 1.60 லட்சம் மக்களை இந்த தீவில் வைத்து உயிரோடு எரித்தார்கள். அங்கிருந்துதான் பிரச்சனை ஆரம்பித்தது. இதனை அடுத்து இந்த தீவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் திடீர் என்று மர்மமான முறையில் உயிரிழப்பது, இரவு நேரங்களில் பயங்கர அழுகுரல் சத்தம், எதிர்பாராத நிகழ்வுகள் என பல விதமான அமானுஷ்யம் நிலவியது.
இதனை அடுத்து அங்கு எரித்துக் கொல்லப்பட்ட மக்களின் ஆவி, இன்று வரை உலாவுவதால் தான் இது போல நடக்கிறது என்பதால் அந்த தீவுக்கு செல்ல தடை விதித்து விட்டது அரசு.
இப்போது சொல்லுங்கள் இன்னும் அந்த 1.60 லட்சம் மக்களின் ஆவி அந்த தீவை சுற்றி சுற்றிக்கொண்டு இருப்பதால் தான் இது போன்று நிகழ்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று உங்கள் அறிவுக்கு புலப்படுகிறதா?.
விடை தெரியாத இந்த கேள்விக்கு இதுவரை யாரும் சரியான விடையை கூற முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். எனவே இருக்கக்கூடியவர்கள் இந்த தீவிற்குள் நுழைய முற்பட்டு அந்த மர்மம் என்ன என்பதை எப்போது விடுவிப்பார்களோ அப்போது தான் இந்த தீவு சகஜ நிலைக்கு திரும்பும் எனக் கூறலாம்.