சகுனியின் சொல்லுக்கு ஏற்ப பகடையில் தாயக்கட்டை கேட்ட எண் விழுந்ததன் மர்மம் என்ன?
தன் கண்முன்னே தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அழிவை தாங்கிக் கொள்ள முடியாமல் பீஷ்மரின் வழி வந்த குலத்தில் உள்ள ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ சகுனி கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் தாயக் கட்டைகள்.
இந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கின்ற எண்களை நினைத்த உடனே கிடைக்க கூடிய வகையில் அமைந்திருந்த காரணத்தினால் தான் தன் பெயருக்கு ஏற்றபடி சகுனி வேலையை செய்து தன் குலத்தை அளித்த பீஷ்மரின் குலத்தையே சர்வ நாசம் செய்வதை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.
தன் தந்தை சுபலன் கோரிக்கையை சுலபமாக நிறைவேற்ற நேரடியாக மோதாமல் மறைமுகமாக நட்புடன் தோளில் இருந்து செவியை கடிக்கும் வேலையில் ஈடுபட்டார்.
அது மட்டுமல்லாமல் தன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெறுப்பு, சினம், இகழ்ச்சி இவற்றை மட்டுமே மனதில் கொண்டு பீஷ்மரின் வழி வந்த குலத்தை அழிப்பதே தன் நோக்கமாக கொண்டிருந்தார்.
அப்படிப்பட்ட சகுனியின் கையில் இருந்த தாயக்கட்டைகள் எதனால் செய்யப்பட்டது என்று கூறினால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்.
கை விரல்கள்
உண்மையில் இந்த தாயக்கட்டைகள் சகுனியின் அப்பா சுபலனின் கை விரல்கள் தான். சுபலின் மகளாகிய காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்னரே ஜாதகத்தில் குறைகள் இருந்த காரணத்தினால் அந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே பரிகாரத்திற்காக ஆட்டுக்கிடா உடன் திருமணம் செய்யப்பட்டு பின் அந்த கிடா வெட்டப்பட்டது.
இந்த உண்மையை அறிந்து கொண்ட பீஷ்மர் விதவையான பெண்ணை திருதராஷ்டிரனுக்கு மனம் முடித்து வைத்ததின் காரணமாக வெகுண்டு எழுந்து சுபலன் மற்றும் அவரது மூன்று மகன்களை சிறையில் அடைத்து ஒரு பிடி உணவு மட்டுமே அளித்தார்.
அந்த உணவை அவர்கள் உண்ணாமல் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி பழிவாங்கவே சகுனியை சிறைக்குள் தங்களுக்கு அளித்த உணவு முழுவதையும், அளித்து வளர்த்ததோடு தன்னுடைய கட்டை விரல்களை உடைத்துக் கொடுத்து அதில் தாயக்கட்டை செய்து விளையாடி பீஷ்மரின் குலத்தை பழிவாங்க முடிவு செய்தார்.
இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் சகுனி உருட்டும் தாயக்கட்டை மட்டும் ஏன் அவர் நினைத்த எண்களை தந்தது என்று.