“ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கும் தீவு..!” – அழகிய தீவு எங்கே தெரியுமா?
பார்ப்பதற்கு மிக ரம்யமான அழகிய தீவு ஒன்று ஆஸ்திரேலியாவில் வேட்டையாடப்படும் சங்கத்தால் கட்டப்பட்டு உள்ளது.இது ஒரு வேட்டையாடும் விடுதி. இங்கு இந்த விடுதியை தவிர வேறு எந்த வீடுகளும் இல்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?.
நம் நாட்டில் அதிக அளவு மக்கள் தொகை உள்ளது. அது போல சீனாவில் மக்கள் தொகையும் அதிகரித்த நிலையில் ஓர் இடத்தில் எத்தனை மக்கள் வசித்து வருகிறார்கள் தெரியுமா? மக்கள் தொகையை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் சுமார் 464 பேர் என்று இருக்கக்கூடிய நிலையில் இங்கு அடுக்குமாடி கட்டிடங்கள் மட்டுமல்லாமல் பல வகையான வீடுகளும் அதிக அளவு காணப்படுகிறது.
ஆனால் ஐஸ்லாந்து லோன்லி ஹவுஸ் புகைப்பட கலைஞர் ஹார்டுர் கிறிஸ்ட்லீஃப்சன் டிசம்பர் 2020இல் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில வீடுகளின் புகைப்படங்களை வெளியிட்டார். இவை மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த வீடு இருந்த இருப்பிடத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் அந்த தீவில் இருந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் எந்த விதமான வீடுகளும் இல்லை.
இந்த வீடானது ஐஸ்லாந்தின் தெற்கில் அமைந்துள்ள எல்லி தீவில் அமைந்துள்ளது. இந்த தீவின் பரப்பளவு சுமார் 110 ஏக்கர் ஆகும். வெஸ்ட்மன்னேஜார் தீவுக் கூட்டத்தில் இருக்கும் மூன்றாவது பெரிய தீவான இதில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இல்லை.
பார்ப்பதற்கு மிக ரம்யமான புல்வெளிகளோடு காட்சியளிக்க கூடிய இந்த தீவில் நிரந்தர மக்கள் தொகை என்று சொல்ல யாருமே இல்லை. வேட்டையாட செல்பவர்கள் மட்டும் இந்த தீவை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இந்த சுமார் ஐந்து குடும்பங்கள் அதுவும் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடல் கோழிகளையும், பஃபின்களையும் வேட்டையாட இந்தப் பகுதிக்கு அதிகமான நபர்கள் வந்து செல்கிறார்கள்.
நகர நாகரிகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒதுங்கி வாழ்ந்த மக்கள் அங்கு வாழ்வது கடினமாக இருந்த காரணத்தால் இந்த தீவினை விட்டு 1930 ஆம் ஆண்டில் அனைவரும் வெளியேறி இருக்கிறார்கள். மேலும் இந்த தீவில் வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் இதர தேவைகளில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு கட்டப்பட்டுள்ள வீட்டில் 1950 களுக்குப் பிறகு மக்கள் வேட்டையாட வரும் நிலையில் தங்க பயன்படுத்துகிறார்கள். படகு மூலம் எளிதாக இந்த பகுதிக்கு செல்லலாம். எனினும் இந்த வீட்டில் மின்சாரமோ, குடிநீரோ இல்லை.