இமயமலையில் கடலா? – இந்தியா மற்றும் ஜப்பான் ஆய்வில் கண்டுபிடிப்பு..
இமயமலை இந்தியாவையும், திபெத்தையும பிரிக்கக் கூடிய ஒரு மலை தொடராக ஆசியாவில் அமைந்து உள்ளது. இமயமலை பற்றி எண்ணற்ற ரகசியங்கள் பல்வேறு வகைகளில் இன்று பேசும் பொருளாக உள்ளது.
இங்கு சித்தர்கள் வசிப்பதாகவும், மிக உயர்ந்த மலைகளைக் கொண்டிருப்பதாகவும், மூலிகைகள் உள்ளதும் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அளப்பரிய சக்தியை தன்னுள் பொதிந்து வைத்திருக்கக் கூடிய இந்த மலை சிவபெருமானின் இருப்பிடமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இமயமலையை பற்றி பலரும் பல வகைகளில் பலவித ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஜப்பான் நாட்டில் இருக்கும் நிகிதா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் கழகமும் இணைந்து இமயமலையின் உச்சியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் இமயமலையின் உச்சியில் சில படிமங்களை ஆய்வு செய்த போது அதில் நீர் துளிகள் இருந்ததை அவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
இதை அடுத்து என்ன நீர் துளியை ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள், இந்த நீர் துளி ஆனது சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை கடலாக இருந்திருக்கலாம். அது இருந்த நீர் துளி தான் இது என்ற முடிவுக்கு தற்போது அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்தக் கடலின் தன்மை எப்படி இருக்கும் என்பது போன்ற விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
தற்போது இருக்கக்கூடிய கடலுக்கும் அன்று இருந்த கடலுக்கும் எத்தகைய ஒற்றுமைகள் வேற்றுமைகள் இருக்கும் என்பது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. எனவே அந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கக்கூடிய நிலையில் புவியின் காலநிலை வரலாற்றை புரிந்து கொள்ள இது உதவியாக அமையும் என்று கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இமயமலையில் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கு ஆய்வுப் பணிகளை தீவிரப்படுத்தும் போது இன்னும் பல தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.
அதன் மூலம் இன்னும் பல அரிய விஷயங்கள் ஆதாரப்பூர்வமாக கிடைக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. இமயமலை நிமித்தமான ஆய்வினை அரசு ஊக்குவிப்பதோடு, துரிதப்படுத்த வேண்டும். உண்மைகள் வெளி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு இமயத்தில் பொதிந்துள்ள ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம்.