“ப்ளூ சோன் லிஸ்டில் ஒகினாவா தீவு” – அப்படி என்ன ஸ்பெஷல் மர்மம் பார்க்கலாமா?
ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒகினாவா தீவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பெஷல் ஒன்று உள்ளது. எனவே தான் இந்த தீவானது “ப்ளூ சோன்” லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
அது என்ன ப்ளூ சோன் லிஸ்ட் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது. உலகில் அதிக ஆயுள் காலத்தோடு ஆரோக்கியமாக மனிதர்கள் வாழும் பகுதியைத்தான் நாம் ப்ளூ சோன் என்று அழைக்கிறோம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த தீவின் மர்மமான ரகசியம் என்ன என்று.
இந்தத் தீவில் வசிக்கும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும் அதே அளவில் சராசரி ஆயுட்காலம் அதிக அளவு கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
ஜப்பானில் இருக்கக்கூடிய ஒகினாவா தீவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் நீண்ட நாட்கள் வாழ்வதால் இதை அமரர்கள் வாழும் தீவு என்று அழைக்கிறார்கள். மேலும் இங்கு வசிக்கும் மக்கள் 100 வயதை தாண்டி வாழக்கூடிய ஆற்றல் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் எந்த தீவில் வாழும் மக்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பதும், வீட்டுக்குள் சோம்பி இருக்காமல் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டு இருப்பதும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இங்கு வாழக்கூடிய மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அவர்களுடைய நீண்ட ஆயுளின் ரகசியமாக உள்ளது. தங்கள் உணவில் அதிக அளவு கடற்பாசி, பச்சைக் காய்கறிகள் மற்றும் இறைச்சியை எடுத்துக் கொள்வதால் தான் இவ்வளவு ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழக்கூடியவர்களாகவும் திகழ்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த தீவில் வாழக்கூடிய பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம் எண்பது புள்ளி 27 ஆண்டுகளாகவும் உள்ளது.
இப்போது சொல்லுங்கள். இது மிகப் பெரிய விஷயம் தானே, இது போல உலகில் வேறு எங்கும் மனிதர்கள் இல்லை என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயம் என்று கூறலாம். மேலும் நூறு வயதை தாண்டி வாழக்கூடிய மக்களும் நீண்ட தீவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
உங்களுக்கும் எந்த தீவை பற்றி வேறு சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அப்படி தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.