அமெரிக்காவின் போர் விமானம் எஃப் 35 எங்கு சென்றது? – மாயமான மர்மம் என்ன?
உலகிலேயே வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவின் அதிரடி அதிநவீன போர் விமானம் எங்கு சென்றது என்று தெரியாமல் தற்போது அதைத் தேடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அட.. வல்லரசு நாடான அமெரிக்க விமானத்துக்கே இந்த நிலையா? என்று பலவிதமான கருத்துக்களை பலவித கோணங்களில் பலரும் பேசி வருகின்ற வேளையில் இந்த அதிநவீன எஃப் 35 விமானத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன அமெரிக்க போர் விமானம் எஃப் 35 சுமார் 650 கோடி மதிப்புடையது.
இந்த அமெரிக்க விமானம் தற்போது எங்கு சென்றது என்று தெரியாமல் அனைவரும் தேடி வருகிறார்கள். இது பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டிருக்கிறார்கள்.
இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானி அவசரமாக பாராசூட்டின் மூலம் குதித்திருக்கிறார். இதன் பிறகு விமானம் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்துக்கு மேல் விமானம் பறந்து கொண்டு இருந்த போது காணாமல் போனது.
மிக நவீனமான இந்த போர் விமானம் எங்கே சென்றது என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து சார்லஸ் டன் நகருக்கு வடக்கு உள்ள இரண்டு ஏரிகளை மையப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடைசியாக விமானம் பறந்த இடத்தைப் பற்றிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தேடுதல் நடந்து வருகிறது.
மேலும் விமானம் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால் உடனடியாக மீட்பு குழுவுக்கு உதவ அழைப்பை விடுத்திருக்கிறார்கள். மேலும் மாயமான விமானத்துடன் இணைந்து பரந்ததாக கருதப்படும் இரண்டாவது எஃப் 35 ஜெட் விமானம் பாதுகாப்பாக திரும்பி உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜ் மெலனி சலினாஸ் கூறியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு தென் கரோலினாவில் ஒரு விபத்துக்கு பிறகு அமெரிக்க ராணுவம் இதன் முழு எஃப் 35 போர் விமானங்களையும் பறப்பதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உங்களுக்கும் இந்த போர் விமானம் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்திருந்தால், அது பற்றிய விவரங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.