யூ.எஃப்.ஓ உண்மையில் உள்ளதா..! – அதனைப் பற்றி பார்க்கலாமா..!
யூ.எஃப்.ஒ என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே அந்த மர்மத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும். ஆங்கில மொழியில் இதனுடைய விரிவாக்கம் ஐடென்டிபைட் ஃப்ளையிங் ஆப்ஜெக்ட் அதன் சுருக்கம் தான் யூ எஃப் ஓ என்பது. இப்போது இதற்கான விளக்கம் உங்களுக்கு தெரிந்த நிலையில் இந்த பறக்கும் பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம்.
1947 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் நகரத்தில் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அமெரிக்க தனியார் விமானி கருத்தினை தெரிவித்திருக்கிறார். மேலும் ஒன்பது பறக்கும் தட்டுகளை அவர் பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
அன்று வரை பறக்கும் தட்டு என்ற பெயரில் அழைக்கப்பட்ட வேற்று கிரக வாசியின் வாகனத்தின் பெயரை யூஎஃப்ஓ என்று அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த ஆய்வில் 1952 ரெண்டுக்கு பிறகு இந்த பறக்கும் தட்டுக்கு இந்த பெயரை பயன்படுத்தப்பட்டது.
மேலும் இந்த பறக்கும் தட்டு பற்றிய விஞ்ஞான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? என்று அனைவரும் மிகப்பெரிய ஆர்வத்தோடு இருந்த சமயத்தில் விஞ்ஞான பிரச்சார அமைப்பின் முதுநிலை விஞ்ஞான வெங்கடேஸ்வரன் இதற்கு மிகச்சிறந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்.
இதனை அடுத்து பறக்கும் தட்டு பற்றி அவர் வெளியிட்ட கருத்தில் பறக்கும் தட்டுகள் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வந்ததாக இதுவரை எந்த தடையமும் கிடைக்கவில்லை என்று உறுதியாக கூறியிருப்பது மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நாசா ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. அவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 முதல் 100 பேர் வரை பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் சில சமயம் காட்சி பிழைகள் கூட பறக்கும் தட்டுக்களாக நம்பப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து பறக்கும் தட்டு பற்றிய விசயத்தில் அதிக அளவு உண்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எனவே வெறும் கட்டுக்கதையாகவே இது வரை இருக்கும் இது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்க படுகிறதோ அன்று தான் இதன் உண்மை நிலை என்ன என்று தெரியவரும்.