“போட் மெயில் கொலை” – செய்தது யார்? புரியாத புதிர்..
தமிழ்நாட்டை பொறுத்தவரை பழைய கொலை வழக்குகளில் அதிக அளவு மக்களால் பேசப்பட்ட போட் மெயில் கொலை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கொலையை ஆள வந்தார் கொலை என்று கூட கூறுவார்கள்.
ஓடும் ரயிலில் செல்வந்தர் ஒருவரை கொன்றது தான் இந்த வழக்கின் முக்கிய கரு. எனினும் இந்த கொலையை யார் செய்தார்கள்? என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ளது தான் இதன் சிறப்பம்சம்.
உண்மையில் இந்த கொலையானது போர்ட் மெயில் நடந்த கொலை அல்ல என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் தான் இந்த கொலை நடந்துள்ளது. எனினும் இதற்கு போர்ட் மெயில் கொலை வழக்கு என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.
1940களில் மதுரை ரயில் நிலையம் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட திருவனந்தபுரம், சென்னை மெயில் அங்கு நின்ற சமயத்தில் தேவகோட்டையைச் சார்ந்த பிரபலமான வங்கியாளர் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தார்.
சுமார் காலை ஐந்து மணி அளவில் இந்த ரயில் செங்கல்பட்டை வந்து அடைந்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்து.மேலும் இவருடன் யாரும் பயணம் செய்யவில்லை என்பதால் யார் இந்த கொலைக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை.
மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் இரவு பத்தரை மணி அளவில் திருச்சி சந்திப்பை வந்தடைந்த போது, அவர் அங்கிருந்த உணவகத்தில் எதையோ வாங்கி சாப்பிட்டதை சிலர் பார்த்திருக்கிறார்கள். எனவே இந்த கொலை ஆனது திருச்சிக்கும், செங்கல்பட்டுக்கும் இடையில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது உறுதியானது.
மேலும் இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் யாராவது ஒருவர் ஏறி கொலை செய்துவிட்டு அடுத்த பகுதியில் இறங்கி இருக்க வேண்டும் என்று காவல்துறை முடிவு செய்தது.
இதனை அடுத்து அந்தப் பகுதிகளில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்தபோது எந்த விதமான தடயங்களும் கிடைக்காத நிலையில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் அருகில் தண்டவாளத்தில் ரத்த துளிகள் இருந்ததை பார்த்திருக்கிறார்கள்.
மேலும் அந்தப் பகுதியில் புதரில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் இருந்திருக்கிறார்.எனவே கொலைக்கு அவர் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தபோது, அவருக்கும் கொலைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகி அவரை விடுவித்து விட்டார்கள்.
இதனை அடுத்து இந்த பணக்கார பயணம் செய்த அடுத்த பெட்டியில் பிரபல நடிகை ஒருவராக ஒருவர் இருந்ததாகவும், அவர்தான் இந்த கொலைக்கு காரணம் என்று பல வகையில் பேச்சுக்கள் எழுந்தது. எனினும் அதனை நிரூபிக்க கூடிய வகையில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
அடுத்து கடைசி வரை எந்த செல்வந்தரின் கொலை வழக்கு இன்று வரை தீர்க்கப்படாத வழக்காகவே காணப்படுகிறது. மேலும் புரியாத மர்மமாக இருக்கும் இந்த கொலையில் குற்றவாளி யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.