என்னது… கடலுக்கடியில் இன்னொரு கண்டம் உள்ளதா? – மர்மம் நிறைந்த 8- வது கண்டம்..
இந்த உலகம் தோன்றிய நாட்களில் இருந்தே மர்மத்திற்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது என்று கூறலாம். எனினும் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில மர்மங்கள் பற்றிய முடிச்சுகள் அவிழ்க்க முடியாத சூழ்நிலைகள் தான் உள்ளது. இந்த நிகழ்வினை எப்படி எடுத்துக் கொள்வது என்று யாராலும் சரி வரையறுத்து கூற முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் உங்களுக்கு உலகில் ஏழு கண்டம் உள்ளது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது மட்டுமல்லாமல் பழமையான லெமூரியா கண்டம் கடலுக்குள் மறைந்துள்ளது என்று பல வகையான சர்ச்சைகள் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு மர்மமான எட்டாவது கண்டம் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த லெமூரியா கண்டமானது கடுமையான ஆழிப்பேரலையால் கடலுக்கு அடியில் மூழ்கி விட்டது என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வரும் வேளையில் மீண்டும் எட்டாவது கண்டம் அதுவும் நீருக்கடியில் என்று விஞ்ஞானிகள் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மமான மிகப் பெரிய கண்டமானது பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது என்று கூறி இருப்பதோடு உலகின் எட்டாவது கண்டமான இதனை ஜிலண்டியா என்று அழைக்கிறார்கள்.
மேலும் இக்கண்டமானது பசுபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் சுடச்சுட தகவல்களை சொல்லி இருப்பதை பார்க்கும்போது பல வகையான எதிர்பார்ப்பை மனிதர்களிடையே இது ஏற்படுத்தி விட்டது என கூறலாம்.
எட்டாவது கண்டம் என்று கூறப்படுகின்ற இந்தப் பகுதியில் மிகப் பழமையான பாறைகளின் மேலோடு மாதிரிகள் கிடைத்துள்ளது இதனைக் கொண்டு இது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கண்டுபிடிக்கப்பட்ட உள்ளதால், இந்தக் கண்டம் எப்படி நீருக்குள் சென்றது என்ற மர்மம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
2017 ஆம் ஆண்டு தான் இந்த புதிய எட்டாவது கண்டம் நீரிக்கடியில் உள்ளதை கண்டறிந்தார்கள். இதனை அடுத்து தற்போது இந்த கண்டம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மேலும் இதை பற்றி இது பற்றிய புதிய தகவல்கள் விரைவில் கிடைக்கும் என நம்பலாம்.