அடுக்கடுக்காக 10 கொலைகள்.. கல்லூரி மாணவர்களின் கோரச் செயல்.. மர்மம் எப்படி விலகியது?
நாங்குநேரி சம்பவத்தை போல் மற்றொரு சம்பவம் அதுவும் 1976 ஆம் ஆண்டு நடந்தது. குறிப்பாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று கூறலாம்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 7 மணி அளவில் புனேகர் குடும்பத்தினர் கடும் குளிரால் அவதிப்பட்டு வந்திருந்தார்கள். மக்கள் குறைவாக வசித்த பகுதியாக திகழ்ந்த அது பாந்தர்கர் சாலை மற்றும் சட்டக் கல்லூரி சாலைக்கு அருகே அமைந்திருந்தது.
பாந்தர்கர் கல்வி நிலையத்தின் அருகில் சமஸ்கிருத பண்டித காசிநாத சாஸ்திரி அபியங்கார் வசித்து வந்திருக்கிறார். சுமார் 88 வயது இருக்கக்கூடிய இந்த பண்டிதரிடம் சமஸ்கிருதத்தில் சந்தேகம் கேட்க வந்து இருப்பதாக கூறி நான்கு இளைஞர்கள் கதவைத் தட்டி இருக்கிறார்கள்.
இவரது வீட்டில் இவரது பேரக்குழந்தைகள் இருவர் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆக மொத்தத்தில் நான்கு பேர் மட்டும் தான் வசித்து வருகிறார்கள். வீட்டில் வேலை செய்ய சக்குபாய் வாக் என்பவர் இருந்திருக்கிறார்.
மேலும் அந்த இளைஞர்களுக்கு கதவை திறந்து விட, அதில் இருந்த ஒருவர் அவரை மடக்கி பிடித்து கத்தி முனையில் வீட்டில் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின்னர் அவர்களின் கை கால்களை கட்டி போட்டார்கள்.
ஏதோ சத்தம் கேட்கிறது என்ற நிலையில் அந்த சமஸ்கிருத பண்டிட்டின் பேத்தி மேலே வர அவளுக்கும் இதே கதி நேர்ந்தது. இச்சூழ்நிலையில் வீட்டுக்குள் இருந்தவர்களின் கழுத்தை இறுக்கி தொண்டையை நைலான் கயிற்றால் இறுக்கமாகக் கட்டிக் கொன்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த செயலை செய்து முடித்த திருடர்கள் சமையல் அறைக்கு சென்று அங்கு இருக்கும் உணவை எடுத்து வைத்து டைனிங் வைத்து சாப்பிட்டு ஒரு வாசனை திரவியத்தை வீட்டுக்குள் தெளித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
ஐந்து பேரைக் கொன்ற இவர்களின் நோக்கம் ஆடம்பர வாழ்க்கையை வாழ எந்த தவறும் செய்யாத மக்களின் உயிரை பறிப்பதாக இருந்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் இந்த நபர்கள் மேலும் ஐந்து கொலைகளை செய்து மொத்தம் பத்து கொலைகளை செய்தது நாட்டையே உலுக்கியது.
இந்தக் கொலையாளிகள் கலைக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் என்றால் உங்களுக்கு பகீர் என இருக்கும். இவர்களின் பெயர்கள் ராஜேந்திர ஜக்கல், திலீப் சுதர், சாந்தாராம், ஜக்டப், முனாவர், சுஹாஸா சந்தக் ஆகியோர் புனே நகரில் எந்த இந்தக் கொலையை தங்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக செய்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து கல்லூரி இளைஞர்கள் எப்படி இப்படிப்பட்ட கோரக் கொலைகளை செய்தார்கள். மேலும் 10 கொலைகள் செய்யும் வரை எப்படி போலீசில் சிக்காமல் அவர்களுக்கு தண்ணி காட்டினார்கள் என்பது போன்ற விஷயங்கள் என்று வரை மர்மமாக இருந்த போதிலும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள்