தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!” – அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..
ஒவ்வொரு மனிதனும் விவேகானந்தர் கூறிய அற்புத பொன் மொழிகளைப் படிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு வார்த்தைகளும் இருக்கும்.
அந்த வரிசையில் முதலாவதாக உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல் என்று விவேகானந்தர் கூறிய அந்த வார்த்தைகளை நீங்கள் ஒருமுறை படிக்கும்போதே உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தூண்டி விடப்படும். எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை உங்களுக்குள் ஏற்படும்.
உன் வாழ்க்கையில் நீ உனக்காக ஒரு பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அடுத்தவரின் பாதையை பின்பற்றாதே. அப்படி பின்பற்றுவதன் மூலம் உனக்கு வெற்றி கிட்டுவது கடினம்.
நீங்கள் நீண்ட தூரம் ஓடி வந்தால் தான் அதிக உயரத்தை தாண்ட முடியும் என்பதை அறிந்தவர்கள். எனவே நீங்கள் ஒரு இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பொய் சொல்லி தப்பிக்க கூடாது. உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள்ளலாம், பொய் வாழ விடாது உண்மை உங்களை சாக விடாது.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் கஷ்டத்தை நீங்கள் நன்கு கவனித்து பார்க்க வேண்டும். அதில் துணிச்சல் தென்படும் புரிந்து கொண்டால் துணிச்சல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்.
அதுமட்டுமல்லாமல் மனிதன் ஒவ்வொரு தோல்வியின் மூலமே புத்திசாலியாக மாறுகிறான். எனவே எந்த சமயத்திலும் நீ எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை உன் நம்பிக்கையை இழக்காமல் முன்னேறு.
உன்னுடைய பலமே வாழ்வாகும். பலவீனம் மரணத்திற்கு சமமானது. ஏன் மரணம் கூட.. என்பதை உணர்ந்து விட்டால் உன்னை பலப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நீயே உணர்ந்து செய்து விடுவாய்.
வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நீ பெற்ற துன்பத்தை விட, அதில் பெற்ற அனுபவம் உனக்கு மிகச் சிறந்த பாடமாகவும், வழிகாட்டியாகவும் அமையும் என்பதை புரிந்து முயற்சிகளை ஒருபோதும் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
நீங்கள் உற்சாகமாக இருக்கத் தொடங்குவது தான் வெற்றிக்கான வாழ்க்கை துவங்கி உள்ளது என்பதற்கான முதல் அறிகுறி. எனவே எப்போதும் உங்கள் உற்சாகத்தை இழக்காதீர்கள்.
மேற்கூறிய விவேகானந்தரின் பொன்மொழிகளை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைபிடிக்கும் பட்சத்தில் கட்டாயம் வெற்றிலக்கை அடைவதோடு மிகச் சிறந்த மனிதராகவும் மாறலாம்.