உன்னால் முடியும்.. இல்லை.. இல்லை.. உன்னால் மட்டுமே முடியும்..!
மனித வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கையில் தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நீங்கள் உங்களுக்குள் விதைக்கும் போது தான் அது தன்னம்பிக்கையாக உருவெடுக்கிறது.
எப்போதும் மனித மனம் ஒரு தேடலில் இருக்கும். அந்தத் தேடல் உங்களால் மட்டுமே கண்டறியப்படக்கூடிய விதத்தில் அமைந்தால், அது மிகவும் சிறப்பான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்கும்.
எனவே தான் உன்னால் முடியும். இல்லை உன்னால் மட்டுமே முடியும் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் நீங்கள் சொல்ல, சொல்ல உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி எளிதில் பயணித்து வெற்றிகளை அடைவீர்கள்.
முடியாது என்று மற்றவர்கள் உங்களைப் பார்த்து சொல்ல முடியாது. ஏனென்றால் அதை தீர்மானம் செய்ய வேண்டியது, நீங்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு சிறு வட்டத்தில் வாழ பழகாதே.
உன்னால் எதையும் செய்ய முடியும் என்று துணிந்து நின்றால் கஷ்டங்கள் உன்னைக் கண்டு விலகி ஓடும். வலிகள் ஏற்படாது. விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நீ நினைப்பது தவறு. அதை மாற்ற விட நீ முயற்சி செய். அது தான் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்பதை யோசித்தால் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும்.
எனவே தயங்காமல் உங்கள் வலிமையை உணர்ந்து உங்கள் மீது நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்களால் மட்டுமே முடியும் என்ற தாரக மந்திரத்தை தினமும் கூறுங்கள்.
மேலும் உன்னால் முடியும் வரை ஓடு. நிச்சயமாக நீ நினைத்தது முடியும் என்பதில் நம்பிக்கையோடு இரு.கட்டாயம் வானம் வசப்படும். இதனை விடுத்து நீ உன் முயற்சியை சற்று தளர்த்தினால் கூட வெற்றி அடைவது சிரமம். எனவே தோல்வி இன்றி முயற்சி செய்தால் உன் வாழ்க்கைக்கு தேவையானதை நீ எளிதில் எட்டிப் பிடிக்க முடியும்.
எனவே தான் மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல முயற்சி செய்பவனே மனிதன் என்று கூறுகிறார்கள். நகர்ந்தால் தான் நதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அது போல் செடியில் பூ பூத்தால் தான் பார்ப்பதற்கு அழகு.
அது போல மனிதா நீ முயற்சி செய்தால் மட்டுமே அழகானவன் ஆவாய். எனவே முயற்சி செய். அதுவும் உன்னால் மட்டுமே முடியும் என்பதை உறுதியாகக் கொண்டு முயற்சி செய்.
கட்டாயம் உன்னால் மட்டுமே முடியும் என்பதால் நீ எதையும் எளிதில் வெல்வாய். வெற்றி உன் காலடியில் விரைவில் வரும்.