“வாழ்க்கையில் வெற்றி பெற..!”- இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வெற்றியை எளிதாக்க நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் எளிதில் அடைக்கலாம்.
அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் உங்களுக்கு தெளிவான மனநிலை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் தெளிவான மனநிலையில் இருக்கும் போது, உங்களுக்கு எதிராக எத்தகைய தடைகள் வந்தாலும் அதை நீங்கள் மள மளவென தகர்த்து எறிந்து விடுவீர்கள்.
இந்த மனநிலையானது எளிதில் உங்களை வெற்றியை நோக்கி கூட்டிச்செல்லும். மேலும் உங்களால் நடந்ததை கடக்கவும், நடப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை இருக்கும். அது போன்ற பட்சத்தில் நடக்கப் போவதை மிக எளிதாக கடந்து செல்லக்கூடிய சக்தியை பெறுவீர்கள்.
ஒரு மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைக்காததனால் அவனுடைய திறமை வீணாகப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். சில சமயம் திறமை இல்லாதவனுக்கு கூட சந்தர்ப்பம் கிடைத்துவிடும். எனினும் அது அவனுக்கு சிறப்பாக பயன் அளிக்காது.
அத்தகைய சூழலில் மனம் குழம்பாமல், உங்கள் திறமையை வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தை நீங்களே அமைத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகரலாம்.
வாழ்க்கையில் ஒன்றை இழக்காமல் வெற்றி பெறுவது என்பது சாத்தியமான ஒன்று அல்ல. உள்ளே போகும் மூச்சு காற்று கூட வெளியே வந்தால் தான் வாழ முடியும், என்ற உண்மையை புரிந்து கொண்டால் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை பக்குவமாக எடுத்து வைத்து சிறப்பான வெற்றிகளை சீக்கிரமே பெற முடியும்.
உங்கள் வெற்றிக்காக நீங்கள் எதை செய்தாலும் அதை ஒரு உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், அர்ப்பணிப்போடும் செய்ய முயலும் போது வெற்றிகள் விரைவில் வந்து சேரும். நிராகரிக்கப்பட்ட இடத்தில் கூட நீ அவமானப்பட்டாலும், உன் மேல் இருக்கும் நம்பிக்கையை நீ அதிகமாக நம்பும் போது அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி காண முடியும்.
விட்டுக்கொடுத்து போவதால் கெட்டுப் போவதில்லை உன் வாழ்க்கை. ஆனால் எந்த இடத்தில் எதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் தான், உனது வெற்றி உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களின் விமர்சனத்திற்கு கோபம் கொள்வதோ, ஆத்திரப்படுவதோ இல்லாமல் நீங்கள் கவலைப்படாமல் எது சரி என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அதை சரியான பாதையில் கொண்டு நடத்தும் போது வெற்றி உன் காலடியில் வந்து நிற்கும்.
நீ எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் உன்னை வெற்றிக்கு அழைத்துச் செல்கின்ற அடிகளாக இருக்க வேண்டும். நேரம் வரட்டும் என்று காத்திருப்பதை விட அந்த நேரத்தை உருவாக்க கூடிய சாதுரியமான குணம் உனக்கு அமைந்துவிட்டால் எல்லாம் வெற்றி தான்.
விதைக்கக்கூடிய நேரத்தில் நீ வேடிக்கையாக இருந்துவிட்டு, விளைச்சல் இல்லை என்று நீ வருந்துவதில் எந்த பயனும் இல்லை. இதன் மூலம் உனக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதை புரிந்து கொள்.
எதிலும் போராடக் கூடிய குணம் உண்டு என்றால் தோல்வியும் ஒரு நாள் தோற்றுப் போகும். வெற்றி உன்னிடம் நிரந்தரமாகும்.