“சிந்தனையை சிறப்பாக்கும் சில வரிகள்..! – படித்தாலே உங்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும்..
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அவனது அனுபவங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத நம்பிக்கையும் தான். எனவே நீ எதிலும் உண்மையாக இருக்கும் வரை, உன்னை எவராலும் அசைக்க முடியாது என்பதை புரிந்து கொள்.
உனக்கு சிறந்த பாடங்களை கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடமே, கல்லூரியோ அல்ல. உன் அனுபவம் மட்டும் தான் என்பதை உணர்ந்து கொண்டால் நீ சீரிய முறையில் சிறப்பாக செயல்படலாம்.
ஒரு வேளை உணவு இல்லாமல் பசி பற்றி நீ அறிந்து கொண்டால் உனக்கு எளிதில் எல்லாமே புரியும். பணம் இல்லாத வாழ்க்கை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நம்பிக்கை இருந்தால் நீ எதையும் சாதிக்கலாம்.
இதை தான் கவிஞர் வாலி ஊக்கு விற்பவனிடம் ஊக்கம் இருந்தால், அவன் தேக்கு விற்பான் என்று கூறி இருக்கிறார். எனவே உங்கள் மனதில் இருக்கும் எல்லா விஷயங்களையும் தக்க முறையில் ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் உங்களுக்கு உள்ளது.
இந்த அதிகாரத்தை நீ சிறப்பான முறையில் செயல்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்க வேண்டியது எளிதில் கிடைப்பதற்கு வழி வகை ஆகும்.
எந்த ஒரு மனிதனுக்கும் கஷ்டமில்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். கஷ்டப்படுவதின் மூலம் உங்களுக்கு ஒரு கெத்து கிடைக்கும். எந்த கஷ்டத்தையும் சமாளித்து வாழ்கிறோம் அல்லவா அது தான் அந்த கெத்து.
எனவே எதையும் எளிமையாக உங்கள் மனதில் போட்டுக் கொண்டு, நேர்மறை ஆற்றலோடு முயற்சி செய்வதால் முன்னுக்கு செல்லக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும்.
எனவே அச்சத்தை விடுத்து உச்சத்தை தொடுவதற்கு இந்த வழிகள் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வாழ்க்கையில் நீ ஒரு உன்னத இடத்தை அடைவாய்.
மேலும் குணத்தை மையமாக வைத்து தான் அவரவர் குணத்திற்கு ஏற்றபடி நண்பர்கள், உறவுகள், பிள்ளைகள் அமைவார்கள். எனவே உங்கள் குணத்தை மேம்படுத்த நல்ல சிந்தனைகளை உங்கள் மனதில் விதைத்து எதையும் நேர்மறையாக சிந்தியுங்கள்.
என்னால் எதுவும் முடியும் என்ற தலைகனத்தோடு இருக்காமல் இருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் அலைகளை சமாளிக்க தெரிந்த மீன்களுக்கு வலைகளை எதிர்கொள்ள முடிவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. வளையக்கூடிய தன்மை இருந்தால் மட்டும் தான் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். வளைந்து கொடுக்க தயங்க வேண்டாம், இது தான் வாழ்க்கை, இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை கசக்காது.