“பிரமிக்க வைக்கும் கவிஞர் கண்ணதாசனின் தன்னம்பிக்கை வரிகள்..!” – நீங்களும் வெற்றியாளர் ஆகலாம்..
கவிஞர் கண்ணதாசன் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் எழுதிய பாடல் வரிகளைக் கண்டு துள்ளாத மனமும் துள்ளும். அந்த வகையில் கவிஞரின் தன்னம்பிக்கை நிறைந்த வரிகளை ஒரு முறை படித்து விட்டால் நீங்களும் எளிதில் வெற்றியாளராக மாறலாம்.
சிறகு கிடைத்தால் பறப்பதும் மட்டும் வாழ்க்கை அல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை என்று அவர் கூறிய வரிகளை சற்று எண்ணி பாருங்கள். வெற்றி கிடைக்க வேண்டிய இடத்தில் தோல்வி கிடைத்துவிட்டால் அதற்காக நீங்கள் துவளக் கூடாது என்பதை தான் அழகாக கூறியிருக்கிறார்.
ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில வேதனைகளை அடைய வேண்டும், என்பதை தான் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்கள் தோறும் வேதனை இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எத்தகைய துயரம் ஏற்பட்டாலும், அதை தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதியாக இருக்க முடியும் என்பதை மிக நேர்த்தியான முறையில் விளக்கி இருக்கிறார்.
உங்களால் ஒன்று தவிர்க்க முடியாது எனும் போது அதை எதிர்கொள்ள கூடிய தைரியம், நிச்சயம் இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அந்த தைரியம் உங்களுக்கு தானாகவே வந்து சேர்ந்து விடும்.
வாழ்க்கையில் நீங்கள் நிறைய கற்றுக் கொண்டால் மட்டுமே எதிலும் வெற்றி அடைய முடியும் என்பதையும், நல்லதை மட்டுமே கற்றுக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை கொக்கைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
வாழ்க்கை என்பதை நீங்கள் கொக்கை பார்த்து கற்றுக் கொள்ளும் போது தான், கொக்கு எப்படி மீனை கொத்துகிறதோ அது போல நீங்கள் நல்லவற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று சிம்பாலிக்காக கூறியிருக்கிறார்.
எனவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், உங்களது இலக்குகளை மட்டும் சிந்தித்து கொண்டே இருந்தால் கட்டாயம் இலக்குகளை எட்டிப் பிடிக்க கூடிய வழி அமையும்.
எனவே எதற்கும் தயங்காமல் துணிந்து உங்கள் பாதையில் முன்னேறுவதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். முயற்சியை இடையில் நிறுத்தாமல் மீண்டும், மீண்டும் முயலும் போது வெற்றி எளிதாக விடும்.
எனவே உங்கள் கனவுகளை நோக்கி இன்றே பயணப்படுங்கள். வெற்றிகளை எளிதாக தட்டிப் பறிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள்.