“பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு…!”- கடந்த காலத்திற்கு பை, பை சொல்லிவிடு தோழா..!
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போது பிறந்தோம் என்று சொல்லிக்கொள்ளடா.. என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
இந்த பாடல் வரிகள் கூறும் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும் கடந்த காலத்தை மாற்றுவதற்குரிய சக்தி உங்களிடம் இல்லை. முடிந்தது எல்லாமே முடிந்ததாக தான் இருக்கும்.
எனவே நம்மை விட்டு கடந்து சென்ற அந்த காலத்தில் நமது சிந்தனையை செலுத்தி வீணாக்காமல், நிகழ்காலத்திற்கு இனி என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிப்பது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் எல்லாமே உன் கையில் தான் உள்ளது. உன்னால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை விதையை உங்களுக்குள் ஆழமாக விதைத்து விட்டாலே போதும் அது விருச்சமாக எழுந்து வரும்.
உங்களது குறிக்கோள் தெளிவானதாக இருந்தால் மட்டும் தான் நீங்கள் ஆரம்ப நிலையில் வெற்றிகளை குவிக்க முடியும். எனவே குறிக்கோளை பற்றிய தெளிவான சிந்தனையை முதலில் ஏற்படுத்துங்கள். அதன் பிறகு அதை நோக்கி பயணம் செய்யுங்கள்.
ஆயிரம் பேரிடம் கேட்டு நீங்கள் ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வதை விட, ஒரு அனுபவம் உங்களுக்கு மிகச்சிறந்த பாடத்தை கற்றுக் கொடுக்கும். இதற்கு உதாரணமாக நாம் காமராஜரை கூறலாம். இவரது அனுபவம் தான் தமிழ்நாட்டை சீரமைக்க உதவியது.
நீங்கள் உங்களிடம் இருக்கும் பயத்தை உங்களுக்குள்ளே புதைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உங்கள் துணிவை மட்டும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ரகசியம் தெரிந்தால் நிச்சயமாக உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
மனித வாழ்க்கையில் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய மிகப்பெரிய விஷயம் எது என்று தெரியுமா? அது வேறு எதுவும் இல்லை எல்லாவற்றிலும் நீங்கள் பொறுமையாய் இருப்பது தான்.
எதை நீ இழந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். இன்னும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நடையிட்டால் அனைத்தும் சாத்தியமாகும்.
எனவே இனியும் நேரத்தை வீணாக்கி தள்ளிப் போடாமல் முயற்சி செய். கட்டாயம் வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாக உன் மனதில் நிலை நிறுத்து.
இன்று இருக்கக்கூடிய மனிதர்களின் மனநிலையானது சம்பாதித்து விட்டாலே வெற்றி என்பது தான். ஆனால் சம்பாதிப்பதில் வெற்றி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதை சம்பாதித்தோம் என்பதை பொறுத்து தான் வெற்றி அமையும்.
நீருக்கு எப்படி நதி மூலம் தெரியாதோ, அது போலவே இந்த பணமும் விதித்தரமானது. அதன் பாதையை நாம் கண்டறிவது சற்று கடினம் தான். இது எங்கிருந்து எங்கு போகிறது, என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
பொறுமையாக இருப்பவர்களின் வாழ்க்கை பிறர் பொறாமைப்படும் அளவிற்கு உயரும். மனிதனின் எண்ணங்கள் எப்போதும் மாறுபட்டு தான் இருக்கும். எனவேதான் மனிதனின் மனதை குரங்குக்கு ஒப்பாக கூறியிருக்கிறார்கள்.
நீங்கள் விருப்பமாக இருந்தால் ஆயிரம் வழிகள் இருக்கும் இல்லையெனில் ஆயிரம் காரணங்களை தான் கூறுவார்கள். எனவே உங்கள் எண்ணத்தில் இலக்கை வைத்து செயல்பட்டால் தான் சரியான இலக்கை அடைய முடியும்.