“உன்னை அறிந்தால் உலகை வெல்லலாம்” – உலகை ஆள வா..
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற பாடல் வரிகள் உணர்த்தக்கூடிய உண்மை என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
வாழ்க்கையில் இருக்கக்கூடிய துயரங்களை விரட்டி அடித்து, வெற்றியடைய எந்த போராட்டம் வந்தாலும் அதை எதிர்கொண்டு போராடக் கூடிய போர்க்குணம் உன்னுள் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை தூண்டு துண்டாக உடைத்து விட்டு வெற்றி அடைய போராடுவீர்கள்.
அந்த வெற்றியை எட்டிப் பிடிக்க உங்களுக்குள் இருக்கும் உன் நம்பிக்கையை நீங்கள் உண்மையாக உணர வேண்டும். எப்போதும் உங்களிடம் இருக்கும் தன் நம்பிக்கை உங்களை ஒருபோதும் துயரத்தில் தள்ளாது. நீங்கள் வெற்றி அடைய வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உண்மையாக நீங்கள் உங்களை உணரும்போது உங்களுக்குள் ஏற்படும் எழுச்சி, நேர்மறையான எண்ணங்களை உங்களிடம் விதைத்து விடும். நேர்மறையான எண்ணங்கள் இருக்கும் போது உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும். எப்போதும் என்னால் எதுவும் முடியும் என்ற சொற்றொடரை திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள். வெற்றியின் அருகே நீங்கள் நிச்சயம் சென்று விடுவீர்கள்.
இலக்கை அடையும் வரை எதிலும் உங்களது கவனத்தை செலுத்த வேண்டாம். இந்த உலகமானது நீங்கள் நல்ல முறையில் வாழ்ந்தாலும் உங்களை குறை சொல்லும். அதே சமயத்தில் தாழ்ந்தாலும் குறை சொல்லும். எனவே அவற்றைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல் உங்களது இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.
எது உங்களுக்கு தேவை இல்லை என்பதை சரியாக கண்டறிந்து கொண்டால் உங்கள் இலக்கினை நோக்கி நீங்கள் பயணம் செல்வதில் தடைகள் ஏற்படாமல் இருக்கும். உங்களை உணர்ந்து உங்கள் செயல் திறன்களை பற்றி தெரிந்து கொண்டால் இலக்குகளை எளிதாக நாம் அடைந்து விடலாம்.
தன் நிலையை அறியக்கூடிய திறன் இருக்கும் பட்சத்தில் நீங்கள் சமூகத்தில் ஒரு முன்மாதிரி ஆளுமையாக திகழக்கூடிய வகையில் இருப்பீர்கள். இந்த நிலையோடு இருக்காமல் உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ள என்னென்ன செய்யலாம் என்பதை நீங்களே உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றியும் உங்களுடைய நிலையைப் பற்றியும் சரியாக திட்டமிட்டால் மட்டுமே வரக்கூடிய சவால்களை எதிர்கொண்டு நீங்கள் அவற்றுக்கு தீர்வு காண முடியும். உங்களுக்குள் இருக்கும் திறனை நீங்கள் வெளிப்படுத்தி வெற்றி அடையுங்கள்.