“கவலை மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவிக்கும் பத்து வழிகள்..!” – ஃபாலோ பண்ணா நீங்களும் வெற்றியாளர்..!
பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம் விட்டு பேசக் கூட நேரம் இல்லாமல் போய் விடுகிறது. பிசியான ஆபீஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உடன் உங்கள் மனம் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல் இருப்பது, உறவினர்கள் சண்டை, அலுவலக சம்பந்தமான பிரச்சனைகள் இவைகள் கூட உங்கள் மனச்சுமையை அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் இந்த மனஅழுத்தம் தேக்கி வைக்கப் படுவதால் மனநோய் தான் உண்டாகும். இந்த மன அழுத்தத்தில் இருந்தும், கவலையில் இருந்தும், பதட்டத்தில் இருந்தும், விடுபட உங்களுக்கு ஒரு எளிமையான வழி உள்ளது. அதை பற்றி இந்த பகுதியில் நீங்கள் விரிவாக காணலாம்.
நமது மனதில் இருக்கும் மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது இருமடங்காகும். கவலையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறையும். எனவே உங்களது கவலைகளை மற்றவரிடம் மனம் திறந்து சொல்லுங்கள்.
அவ்வாறு உங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உண்மையானவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்கு மிகுந்த கவலையை கொடுக்கும் ஒரு விஷயத்தை நினைத்து நான் மனம் திறந்து அழுவது ஒரு மிகச் சிறந்த விஷயமாகும்.
உங்களது மனதில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நினைத்து கண்ணீர் சிந்தினால் கண்ணீரோடு சேர்ந்து அந்தப் பிரச்சனையும் கரைந்து போய்விடும். பெண்களை விட ஆண்கள் அதிக மன இறுக்கத்திற்கு ஆளாவதற்கு காரணமாக இந்த அழுகையை சொல்லலாம். ஏனெனில் ஆண்கள் அழுவதே கிடையாது என்பதுதான் உண்மை.
எனவே உங்களின் கவலையை தீர்க்கும் வடிகால் தான் இந்த அழுகை. மனதில் இருக்கும் கேள்விகள், தவிப்புகள், கோபங்கள் என மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயத்தை நீங்கள் உங்களுடனேயே பேசிக் கொள்ளுங்கள், உங்களுக்கான பதிலை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்களது மகிழ்ச்சியை கூட ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நீங்கள் உள்ளுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வதால் சிறந்த பலன் கிடைக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆராய்ச்சியில் ஒரு மூன்றாம் நபர் உங்களது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் வேகத்தைவிட உங்களால் உங்களது சொந்த உணர்ச்சியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாவின் மூலம் வார்த்தைகளை வெளிபடுத்துவதும் போது ஏற்படும் வலி குறைவுதான். ஆனால் எழுத்துக்கள் மூலம் அந்த வலியை அதிகமாக வெளிப்படுத்தக் கூடும். எனவே ஒரு காகிதத்தில் உங்களது மன சஞ்சலங்களை எழுதி அதைக் கிழித்துப் போட்டு விடுங்கள். அத்தோடு உங்கள் மன அழுத்தமும், கவலையும் முடிவுக்கு வரும்.
நண்பர்களுடன் உங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்களுக்கு உண்டாகும் கவலைகள் மற்றும் பதட்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம் . எப்போதுமே நீங்கள் செய்யும் செயலின் மீது அதீதமான ஒரு நம்பிக்கையை வைக்க வேண்டும்.
அது தன்னம்பிக்கையாக இருந்தாலும் தவறில்லை. ஆனால் செய்யக்கூடிய காரியங்களில், நீங்கள் நம்பிக்கையுடனும் துடிப்புடனும் இருந்தால் உங்களுக்கு கவலை ஏற்படாது. உங்கள் உறவுகளுடன் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவருடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவினை எடுக்க முடியும்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் கவலை மற்றும் பதட்டத்தில் இருந்து விடுபடலாம். நீங்கள் செய்யக்கூடிய காரியம் மிகச் சிறப்பாக அமையும். நான் இதை செய்து விட்டேன் என்பதில் நீங்கள் உறுதியுடன் இருந்தால் கவலை ஏற்படாது.
கவலையை மறக்க அதிக அளவில் ஆங்கில மருந்துகளை உட்கொண்டு நாம் நோயாளி ஆக்கி விட்டோம் என்ற ஒரு நோக்கிலேயே வாழ்ந்து வந்தால் உங்களுக்கு அந்த நோய் நீங்காது. மேலும் அந்த நோயின் தாக்கம் உங்களிடையே அதிகரிக்கும்.
எனவே முடிந்தவரை மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து விடுவது மிக நல்லது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் நீங்கள் கவலை, பதட்டமும் இல்லாமல் இருக்கலாம். உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் சீரான வழியில் அமைத்துக் கொண்டு சிறப்பாக அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்தால் கவலை மற்றும் பதட்டம் இல்லாமல் இருக்கலாம்.
இவையெல்லாம் சரியாக உங்களுக்கு இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக சிறந்த முறையாக இருக்கும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வினை நீங்கள் முடிவு செய்வது மிகவும் நல்லது. இதன் மூலம் நீங்கள் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுபடலாம்.