• November 21, 2024

தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? – இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க…

 தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமா? – இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க…

self confidence

இன்று தன்னம்பிக்கை பற்றி பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், வளர்த்துக்கொள் என்று கூறுவதால் என்ன பயன்.

எனவே எந்த கட்டுரையில் ஒருவர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

யானைக்கு அதன் பலம் தும்பிக்கையில் உள்ளது என்றால் மனிதனுடைய பலம் அவன் நம்பிக்கையில் தான் இருக்கிறது. எனவே முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.

self confidence
self confidence

இப்படி நீங்கள் உங்களை நம்ப ஆரம்பித்து விட்டால் பணம் உங்களுக்கு ஒரு தடையல்ல, படிப்பும் உங்களுக்கு ஒரு தடையாக இருக்காது. வெற்றியோ, தோல்வியோ நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி நாம் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வது மிகவும் அவசியமானது.

எப்போதுமே நீ உன் பலத்தை அறிந்து கொள்ள வேண்டும். உன்னிடம் இருக்கும் நல்லவற்றை நீங்கள் விஸ்தரிக்க வேண்டும் .அவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் வெற்றி இலக்குகளை எளிதில் அடைய முடியும்.

மேலும் உங்கள் இடையே காணப்படுகின்ற எதிர்மறையான எண்ணங்களையும், செயல்களையும் நீங்கள் தூக்கி குப்பையில் போடுங்கள். அவற்றை மாற்றி விட்டாலே உங்களுக்குள் ஒரு அபரிதமான திறன் ஏற்பட்டு வாழ்க்கையில் உங்களை முன்னேற அதுவே உத்வேகப்படுத்தும்.

உங்களுடைய திறனின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு வைக்கும் போது உங்களால் முடியும் என்று நீங்கள் எப்போதுமே நினைத்து அந்த செயலை தொடங்கினால் கட்டாயம் உங்களால் எளிதில் அவற்றை செய்ய முடியும். இது தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய வழிகளில் ஒன்றாகும்.

self confidence
self confidence

எப்போதும் நீங்கள் உங்களை தாழ்வாக பார்க்காதீர்கள் உங்களால் முடியாது என்று எதிர்மறையாக எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதின் மூலம் உங்கள் சுயமதிப்பு உயர்வதோடு உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

புதிய திறன்களை நீங்கள் கற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் இலக்குகளை அடைய அது உறுதுணையாக இருக்கும். எனவே நீங்கள் எப்போதும் புதிய சிந்தனைகளை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள். கனவு காணுங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும்.

இனிமேல் சோம்பி இருக்காமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை அதிகரித்து தன்னம்பிக்கையோடு எதிலும் ஈடுபடுங்கள். உங்கள் வெற்றி இலக்குகளை நீங்கள் எளிதில் அடைவதோடு வெற்றியாளர்களின் பட்டியலில் ஒருவராக நீங்கள் இடம் பிடிப்பீர்கள்.