வெற்றி வேண்டுமா? எதிர்நீச்சல் போடு..! – கட்டாயம் உனக்கு வெற்றி கிட்டும்..!
தோல்வியைக் கண்டு நீ மன தைரியத்தை இழக்கக்கூடாது. உன் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை நீ வளர்த்துக் கொண்டால் வெற்றி என்பது விரைவில் உன் கைவசம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கெல்லாம் நீ பயப்படக்கூடாது. தோல்வி உன்னை துரத்தி வந்தால் கட்டாயம் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று மாவீரன் நெப்போலியன் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.
வாழ்வது ஒரு முறை தான். அந்த முறையில் என்ன தான் சோதனை வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து சாதனை படைக்க முயல்வதை விடுத்து எதற்காக நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு சாதாரண தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கிய பில்கேட்ஸ் இன்று உலகின் பணக்காரர்களில் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்று என்றாவது நினைத்துப் பார்த்தீர்களா?
இது அவரது நம்பிக்கையின் மூலம் அதாவது தன்னம்பிக்கையின் மூலம் சாத்தியமாகியது என்று கூறலாம். அந்த நம்பிக்கையை நீங்களும் உங்களிடம் வையுங்கள். வைராக்கியத்தோடும், விடாமுயற்சியுடன் எல்லாவற்றையும் முயற்சி செய்து பாருங்கள். வசதிகள் வாய்ப்புகள் இல்லை என்றாலும் தொடர்ந்து நீங்கள் அதைப் பெற போராட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் எத்தனை முறை நீங்கள் வீழ்ந்தாலும், உடனே எழுந்து மீண்டும் ஓடுவதற்கு தயாராக வேண்டும். அப்போது தான் உங்களால் வெற்றி இலக்கை எளிதாக பிடிக்க முடியும்.
எதை வேண்டுமானாலும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் இழக்கலாம். ஆனால் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அப்படி இழக்காமல் இருந்தால் கட்டாயம் அவனால் ஒரு வரலாற்றை உருவாக்க முடியும்.
அதற்காக என்னிடம் நிறைய தன்னம்பிக்கை இருக்கிறதே என்று நீங்கள் சும்மா இருக்கக் கூடாது. நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய கட்டாயம் கடுமையான உழைப்பை போட்டால் மட்டுமே உலகம் உங்களை அடையாளப்படுத்தும். நீங்கள் உலகத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டாமா.
அப்படி இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் கனவுகளோடு உங்களது இலக்குகளை நோக்கிப் பயணம் ஆகுங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் வாயில் கதவை வந்து தட்டும். இது வரை இப்படியே இருந்தது போதும். இனியாவது விடியும் என எண்ணி புறப்படுங்கள். கட்டாய வெற்றி உங்களுக்கு கிட்டும் வரை போராடுங்கள்.