இப்படி செஞ்சா பணம் கிடைக்குமா? – பணத்தை ஈர்ப்பது எப்படி.. ஜோசப் மராஃபி ..
மனிதன் Money யை தேடி ஓடுவதால் தான் அவனை மனிதன் என்று அழைக்கிறோமோ.. என்று எண்ணத் தோன்றும். எனினும் எந்த பணமானது மனிதனின் நன்மை மற்றும் தீமையை நிர்ணயிக்கக் கூடிய வகையில் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் அற்புத காரணி.
அப்படிப்பட்ட இந்த பணத்தை எப்படி ஈர்ப்பது என்று ஜோசப் மராஃபி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இதன்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்களது இருப்பு அதிகரித்து நீங்கள் கட்டாயமாக கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம் பிடிப்பீர்கள்.
மேலும் ஒரு மனிதன் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருப்பதற்கு தகுதியானவன் தன்னுடைய எல்லா தேவைகளையும் பணத்தைக் கொண்டு வாங்க முடியும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது. அதை நீங்கள் உணர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உங்களது பணத்தை சம்பாதிக்கவும் அவற்றை ஈர்க்கவும் சில உத்திகள் உள்ளது.
உத்தி 1
முதலில் உங்களுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும். அது ஆசையாக இல்லாமல் உங்களுக்குள் ஒரு நெருப்பாக ஏறிய வேண்டும். உங்கள் உடல், எண்ணம், உணர்வுகள் அனைத்தும் பணத்தை நோக்கியே ஓட ஆரம்பிக்கும்.
உத்தி 2
நீங்கள் பணத்தை ஈர்க்க எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களின் வார்த்தைகளை பற்றி கவலைப்படாமல் உதறி எறியுங்கள். நீங்கள் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்கும் கனவையும், இலட்சியத்தையும் மற்றவர்களிடம் பகிரும்போது அதைப்பற்றி அவர்கள் சரியாக உணராமல் இருக்கலாம். எனவே உங்களது கனவை அவர்கள் சிதைக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே பணம் தேடும் முயற்சியில் உங்களுக்கு சுணக்கம் வரும்.
உத்தி 3
உங்கள் பணம் சேர்க்கும் பணியை நீங்கள் லட்சியமாக உங்கள் மனதுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மூளையின் நினைவில் எப்போதும் உங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்யக் கூடிய பதிவுகளை பதிவிடுங்கள். ஆழ் மனத்தில் நீங்கள் கோடீஸ்வரராக வேண்டும் என்ற பிரார்த்தனையை ஒவ்வொரு நாளும் சொல்லும்போது இந்த நேர்மறையான வார்த்தைகள் உங்கள் மூளைக்குள் சென்று ஆழமாக பதிந்து அவற்றை செயல்படுத்த உதவி செய்யும்.
உத்தி 4
நீங்கள் கட்டாயம் ஒரு கோடீஸ்வரராக வருவீர்கள் என்ற கனவுகளை மனதார நம்புங்கள். உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருந்தாலும், உங்களுக்கு இது போன்ற உற்சாகமான கனவுகள் உங்களை மீண்டும் அந்தப் பாதையில் நடைபெற உதவி செய்யும்.
உத்தி 5
நேர்மறையான சிந்தனைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதோடு உங்கள் கனவை நினைவாக்க கூடிய காட்சிகளை உங்களோடு நீங்களே உற்பத்தி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பணத்தை மிக விரைவில் ஈர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும் விரைவில் நீங்கள் பணக்காரர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பீர்கள்.