“வாழ்க்கையில் நம்பிக்கையை தூண்டும் பொன்மொழிகள்..!” – அவசியம் படியுங்கள்..
எடுக்கின்ற பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவியாக கருதப்படும் இந்த மனிதப் பிறவியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு இருக்கும் பட்சத்தில் தான் அவர்களது வாழ்க்கை வளமாக மாறும்.
இந்த சமயத்தில் எத்தகைய இடர்கள் ஏற்பட்டாலும், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக நீங்கள் பற்றிக் கொண்டால் கட்டாயம் அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வீர்கள்.
அந்த வகையில் உங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில நம்பிக்கை பொன்மொழிகளை இந்த கட்டுரையில் படித்து உங்கள் நம்பிக்கையை பன் மடங்காக பெருக்கிக் கொள்ளலாம்.
உங்களுக்கு நம்பிக்கை குறையும் போது உங்களுடைய எதிரிகளையும், துரோகிகளையும் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நினைக்கும் போது உங்களுக்குள் ஒரு புத் உணர்வு ஏற்பட்டு அவர்களை வெல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போது உங்கள் நம்பிக்கை பன்மடங்காக அதிகரிக்கும்.
எதைப் பார்த்தாலும் நீங்கள் மலைத்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மலையை பார்த்தால் கூட இதன் மீது எப்படி ஏறி ஏற வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால், அது எத்தகைய மலையாக இருந்தாலும் அது உங்கள் காலடியில் கீழ் தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உலகிலேயே மிக சிறந்த விஷயம் நம்பிக்கை. அதை நீங்கள் அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் உங்கள் நம்பிக்கையை நீங்கள் ஆழமாக வைக்கும் போது, அதை நீங்கள் சில நொடிகளில் அடைந்து விட முடியும்.
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒரு காரணி என்று கூறலாம். எத்தகைய ஏமாற்றத்திற்கும் முக்கிய காரணமாக இந்த நம்பிக்கை தான் உள்ளது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் நம்பிக்கையை இழக்கும் பட்சத்தில் எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணம் தோன்றும். இது முடிவல்ல ஒரு சிறிய சுணக்கம் தான் எனவே நீங்கள் முன்னேறி விட வேண்டும் என்ற நம்பிக்கையை உங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
எத்தனை கைகள் உன்னை தாங்காவிட்டாலும் உன் நம்பிக்கை உன்னை ஒருபோதும் கைவிடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கை தான் பிறப்பிடமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டால், உங்களுக்கு போர்க்களத்தில் கூட வெற்றி கிடைக்கும்.
எப்போதும் அடுத்துவரோடு உன்னை ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உலகிலேயே சிறந்தவன் நீதான் என்ற நம்பிக்கை உனக்குள் இருக்கும் வரை உன்னை யாரும் வெல்ல முடியாது.
மனிதன் மரணம் வரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது எதற்காகவும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்ற வாசகத்தை, நீ கடைப்பிடித்தால் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பாய்.
உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அதன் பிறகு அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நிச்சயம் உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம்.
மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் நம்பிக்கையோடு கடைப்பிடிக்கும் பட்சத்தில் வளமான எதிர்காலம் உங்களுக்கு எளிதில் அமையும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.