உங்களை சிந்திக்க வைக்கும் சில வார்த்தைகள்…
இன்று உள்ள காலகட்டத்தில் மனிதன் வாழ்க்கையில் சிறப்பாகவும், மன அமைதியோடும் வாழ்வதற்கு மூன்று விஷயங்கள் அவசியம் தேவை என்று கூறலாம். அந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக இன்பமயமாக மாறிவிடும்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பழையதை அனைத்தையும் நீங்கள் மறந்து விட வேண்டும். அப்படி மறந்த பிறகு நடக்கின்ற நிகழ்காலம் பற்றி கவனமாக நீங்கள் நடக்க வேண்டும். மேலும் வரப்போகும், எதிர்காலத்தை நல்ல முறையில் சிந்தித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும்.
இந்த உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அந்த அளவு நியாயங்களும் உள்ளது. அநியாயங்களும் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எது எப்படி போனாலும் இவற்றிற்கு தர்மம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து விட்டால் பிணக்குகள் வாழ்க்கையில் ஏற்படாது.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் போலவே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த வாழ்க்கையை நீங்கள் பயணித்து வரும் போது தெரிந்து கொள்ளவும், நிறைய விஷயங்கள் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.
எப்போதுமே நீங்கள் மற்றவர்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். உங்களுக்கு துரோகம் செய்பவர்களை மன்னித்து பாருங்கள்.
இயற்கை சீரழிவான புயலின் வேகத்தை கணிக்க முடிந்த மனிதனால் அடுத்த மனிதனின் நகர்வுகளையும், அவன் மனதின் எண்ணத்தையோ, இன்னும் கணிக்க முடியவில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி அந்த மனிதனின் நகர்வுகளையும், மனதின் அழகையும் புரிந்து கொண்டால் மனிதனுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை எளிதாக செய்து முடித்து விடுவான்.
நீங்கள் எளிதில் வெற்றி பெற சிறந்த வழி என்ன என்றால் மீண்டும், மீண்டும் முயற்சிப்பதை நீங்கள் விடாமல் செய்ய வேண்டும். இந்த யுக்தி உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக உச்சத்தை பிடிப்பதோடு வெற்றிகளை எளிமையாக அடைந்து விடுவீர்கள்.
எனவே உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை நீங்கள் பொருட்படுத்தாமல், அதில் இருந்து வெளியே வந்து உங்கள் மீது நம்பிக்கையை வைத்து விடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு வெற்றி ஏற்பட்டு இன்பத்தை அள்ளிக் கொடுக்கும்.
இந்த உலகில் நீங்கள் புத்திசாலியாய் இருங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் முட்டாளாகவாவது நடிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
1 Comment
அழகான வார்த்தைகளை அள்ளி கொடுத்த ஆசிரியருக்கு நன்றிகள் பல. ❤️
Comments are closed.