விண்ணை தொட்டுவிடலாம் வா பெண்ணே வெளியே..!
நீ மனது வைத்தால் விண்ணும் உனக்கு வசமாகும் என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. உன் நம்பிக்கையோடு நீ இதை செயல்படுத்த விரும்பினால் கட்டாயம் நீ விண்ணை தொட்டு விடலாம். பெண்ணே வா வெளியே.
எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் துச்சமாய், நீ தள்ளிவிட்டு இந்த பூமியில் அற்புத ஆற்றல் படைத்த பெண்ணாய் திகழ வேண்டும் என்றால் அச்சத்தை விடு. நேர்மையான எண்ணத்தில் வளரு.. அப்போது நீ நினைப்பது எல்லாம் ஜெயமாகும். பெண்ணே இனியும் காத்திருக்க வேண்டாம் வா வெளியே.
யாருக்காக எதையெதையோ செய்து தரும் பெண்ணே, உனக்காக நீ இதைச் செய்ய மாட்டாயா? உனக்குள் இருக்கும் நம்பிக்கையை உன்னால் உணர முடிந்தால் இந்த உலகிலேயே உன்னதமானவளாக நீ தான் இருப்பாய். உன்னால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து விட்டால் வானம் கூட உனக்கு எல்லையாக இருக்காது. அதை தாண்டி ஒரு உலகத்தில் நீ இருப்பாய்.
உன் கனவுகள் எல்லாம் நினைவாக வேண்டும் என்றால் கடினமான முயற்சிகளோடு, உழைப்பினை நீ மேற்கொள்ள வேண்டும். எதற்கும் தயங்காமல் நீ வெளியே வந்தால் உன்னால் எல்லாம் புதுமையாய் மாறும் என்ற எண்ணம் உனக்குள் இருக்க வேண்டும்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் உலகில் நடையிட நீ ஆரம்பித்து விட்டாய், எனினும் இன்னும் சில பெண்களுக்கு ஏனோ தயக்கம் உள்ளது. அதனால் தான் எட்டிப் பிடிக்க வேண்டிய உயரங்களை உன்னால் எட்டிப் பிடிக்க முடியும் என்ற தைரியமும், தேம்பும் இருந்து கூட சில இடங்களில் நீ ஒதுங்கியே நிற்கிறாய்? ஏன் இந்த தயக்கம்.
உன் தயக்கத்தை விடுத்து சரித்திரம் படைக்க சிங்க பெண்ணாய் நீ எழுந்து வெளியே வா.. உன்னை பார்க்க பலர் காத்திருக்கிறார்கள். உன்னதமான சாதனைகளை செய்ய நிச்சயம் நீ வெளியே வர வேண்டும்.
இது உனக்கான உலகம், உன்னாள் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் நீ நிச்சயம் வெளியே வரலாம். அப்படி வெளியே வரக்கூடிய சமயத்தில் உனக்கு ஏற்படும் தடைகளை கூட நீ படிக்கட்டுகளாக மாற்றி விட்டால் உன்னை போல் எவராலும் முடியாது என்று கூறும் அளவுக்கு நீ வான் முட்ட உயர்ந்து நிற்பாய்.
வா பெண்ணே சரித்திரம் உனக்காக காத்திருக்கிறது. சாதனைகள் படைக்க நீ கட்டாயம் வெளியே வர வேண்டும். அப்படி வந்தால் இந்த வானமும் உன் வசமாகும். வா பெண்ணே வெளியே..