எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இமயம்.. எழுந்து வா நண்பா பிடிக்கலாம்..
இரும்பு இதயத்தோடு இருக்கின்ற இளைஞர்களே, நீங்கள் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான் இமயம் உள்ளது. எனினும் உங்கள் இடையே இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை, நீங்கள் தகர்த்து எறிந்தால் போதும் நிச்சயமாக அந்த இமயத்தை தொட்டு பிடிக்கலாம்.
உங்கள் கனவுகளை நினைவாக்கும் சாவி உங்கள் கைகளில் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். நீ முயற்சி செய்தும் வெற்றி அடையவில்லை என்று வருந்துவதை விட, அடுத்த வெற்றிக்கான முயற்சியை முன்னதாக கொடுத்து விட்டோம் என்ற நினைப்புதான் உன்னை வெற்றி படிக்கட்டில் ஏற்றி செல்லும் என்பதை மறந்து விடாதே.
எதிலும் நம்பிக்கையாக இருக்க வேண்டும். எப்போது உங்களின் விருப்பமும், வேலையும் ஒன்றாக ஆகிறதோ,அப்போதுதான் நீங்கள் சாதிக்க துவங்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய இருக்கின்ற இன்பங்களை பெருக்கிக் கொள்ள முயல்வதை விட, உங்களது லட்சியங்களை அதிகரிக்க முயற்சி செய்வதுதான் மேலாக இருக்கும். அப்போதுதான் இமயத்தை நீங்கள் எட்டிப் பிடிக்கின்ற ஆற்றலை அதிகமாக பெறுவீர்கள்.
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற பேச்சினை விட்டு, விட்டு மனிதனுக்கு இருக்கும் மதியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசித்தால் விதி உங்களுக்கு விதிவிலக்காய் மாறிவிடும்.
உனக்குள் அதிகரித்து இருக்கும் கோபத்தை விட்டு விடு, மன்னித்துக் கொள் என்ற ஒற்றை சொல் அனைவரையும் திருப்திப்படுத்தும். தவறே செய்யவில்லை என்றாலும் அந்த இடத்தில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்றால் இந்த ஒரு ஒற்றை சொல்லை நீங்கள் உச்சரித்தால் போதும்.
உங்கள் இடையே இருக்கக்கூடிய தவறை சுட்டிக்காட்டும், போது நீ பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிப்பாய். அதை விடுத்து அந்த தவறை சுட்டிக்காட்ட கூடாது. குத்திக் காட்டும் போது தான் உன் மன நிலையில் சங்கடங்கள் ஏற்படுகிறது. இதன் காரணத்தினால் நீ துவண்டு விடுவாய்.
பசி அடங்கிய பிறகு கிடக்கின்ற உணவும், மனம் வெறுத்த பிறகு கிடைக்கக்கூடிய அன்பும் பயனற்றது. இதனால் எந்த வித பயனும் உங்களுக்கு இல்லை. எனவே மனதில் தைரியத்தோடு எதையும் நீங்கள் செய்வதற்கு தயாராகுங்கள்.
உலகம் ஆயிரம் பேசும் அதைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் உங்களுக்கு சரி என்று படுவதை தயங்காமல் செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்குள் இருந்தால், இமயம் உங்கள் காலடியில் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
இந்த உலகில் வாழ்கின்ற மனிதனின் தேவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் போகும். எனவே அந்த வாழ்க்கையை நான் எப்படி செவனே நடத்துவது என்பதை பற்றிய சிந்தனைகள் உங்களுக்குள் ஏற்பட வேண்டும். எப்போதும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இருக்க பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
உங்கள் வாழ்க்கையில் இழப்புக்கள் ஏற்படுவதற்கு பிறகு வருத்தப்படுவதை தவிர்க்க, நீங்கள் முன்பு உங்கள் வாழ்க்கையை திருத்தம் செய்ய வேண்டும். குறைகளை சரி செய்ய கற்றுக் கொண்டால் எளிதில் உங்கள் இலக்குகளை அடைய உதவி செய்யும்.
தனிமை அது நாம் எடுத்துக் கொண்டால் சொர்க்கமாக மாறும். எதுவுமே நாம் எடுத்துக் கொள்கின்ற மனப்பான்மையில் தான் அமையும் என்பதை நீ உணர்ந்து கொண்டால் எதையும் உன்னதமான முறையில் சாதிக்க முடியும்.
ஒருவன் வாழ்க்கையை வாழ்வதற்கு உருவம் கொடுத்தவர்கள், நமது பெற்றோர்கள். இந்த உருவம் தான் நமக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் ஒழுக்கம் என்பது அடையாளத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய உருவம் என்பதை புரிந்து கொண்டால் நீ மிகச்சிறந்த மனிதனாக வருவாய்.
நாம் பெறுகின்ற வெற்றியின் மூலம் நம்மை உலகிற்கு அறிமுகம் செய்யலாம். அதே தோல்வி என்பது நம்மை, நமக்கே அறிமுகம் செய்வது என்ற எளிய தத்துவத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேற எந்த விதமான தடைகளும் ஏற்படாது.
நீங்கள் ஒரு தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியை பற்ற வைப்பதில் உள்ள கவனம், முதல் தீக்குச்சி இடையே வந்துவிட்டால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எளிதில் ஜெயித்து விடலாம்.
நமக்கு தேவை என்ற சமயத்தில் ஒருவன் கெட்டவனாக இருந்தாலும், அவனை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருந்தால் மட்டும் தான் நம்மால் வெற்றி என்ற இலக்கை எளிதாக எட்டிப் பிடிக்க முடியும். தேவை கருதி அனுபவம் என்பது நாம் கடந்து வந்த பாதை அல்ல, வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டால் இமயத்தை எட்டிப் பிடித்து விடலாம்.
ஒரு சில மனிதர்களுக்கு உலகத்தையே கையில் கொடுத்தாலும், திருப்தி ஏற்படுவது இல்லை. எனவே உங்களுக்கு எதில் திருப்தி உள்ளது என்பதை நீங்களே முடிவு செய்வதின் மூலம், நீங்கள் எடுக்கின்ற இலக்குகளில் பயணம் செய்வது எளிதாக இருக்கும்.
கடலில் செல்கின்ற கப்பல் கரையை நெருங்குவதற்கு கலங்கரை விளக்கத்தை பார்த்துதான் வரும், அதுபோலவே உழைப்பவரின் உயர்வை பொறுத்துதான் அவனது மேலாண்மை திறன் இருக்கும்.
இதனைத் தான் அழகிய தமிழில் “வரப்பு உயர்ந்தால் தான் நீர் உயரும், நீர் உயர்ந்தால் தான் நெல் உயரும்” என்று நம் பாட்டன் கூறி இருக்கிறார். நீங்கள் உழைப்புக்கு உயர்வு கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே இளைஞர்களே, இதுவரை நீங்கள் சென்ற பாதையில் வீறு நடை போட.. உங்களுக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கையை மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். எளிதில் இமயத்தை உங்கள் வசப்படுத்தலாம்.
வானமே எல்லை என்று ஒரு எல்லை வகுக்காமல், உன்னை நம்பி நீ உன் எல்லைகளை விரிவாக்கு, சிறகு விரித்து நீ பறக்கும் போது வெற்றிகள் உன் காலடியில் வந்து சேரும். இமயத்தை நீ எளிதில் தொட்டு விடலாம் என் அன்பு இளைஞனே.