அத்தனைக்கும் ஆசைப்படு.. எல்லாம் உன் வசம் ஆக..
ஒவ்வொரு மனிதருக்கும் ஆசை இருந்தால் மட்டுமே எதையும் தேடி செல்ல, ஒரு வேட்கை இருக்கும். எனவே எல்லாவற்றுக்கும் நீ ஆசைப்பட வேண்டும். அந்த ஆசையை நிறைவேற்ற கடுமையான முயற்சிகளை செய்தால் கட்டாயம் உனது ஆசை நிறைவேறும்.
இந்த உலகிலேயே வேரில்லாமல், நீர் இல்லாமல் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான். எனவே ஆசைகளை நிறைவு செய்ய நீ திட்டமிட்டு எதையும் செய்வது மிகவும் அவசியமாகும்.
எதன் மீதும் அளவோடு ஆசை என்பதை விடுத்து, அதீத ஆசை கொள்ளும் போது தான் வேட்கை அதிகரித்து, அதை நோக்கி நகரக்கூடிய தன்மை ஏற்படும். அளவுக்கு அதிகமான ஆசையை வைத்தால் நிம்மதி ஏற்படாது என்பது தவறு. குறிப்பிட்ட பொருட்களின் மீது அதாவது பணம் போன்றவற்றின் மீது ஆசையை அளவாக வைக்கலாம்.
ஆனால் உன்னால் ஒருவருக்கு நன்மை நடக்கிறது, வெற்றி கிடைக்கிறது என்றால் அதுபோன்ற ஆசைகளுக்கு எல்லையே இருக்கக் கூடாது. எனவே அத்தனைக்கும் ஆசைப்படு.
மனிதர்கள் பசிக்காக உணவைத் தேடிய காலத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள். எந்தவிதமான நோய்களின் தாக்குதல்களும் அவர்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் பணத்தை நோக்கி, எப்போது ஓட ஆரம்பித்தானோ அப்போதுதான் ஆரம்பித்தது, இந்த ஆரோக்கிய சீர்கேடு எனக் கூறலாம்.
உங்கள் ஆசைகள் ஆர்வமாக மாற வேண்டும். எனவே பெரிதாகவே ஆசைப்படுங்கள். அந்த ஆர்வம் தான் உங்களுக்கு முயற்சியை விதைக்க கூடிய ஒரு அற்புதமான காரணியாக இருப்பதால் ஆசைப்படுவது அவசியம். அந்த ஆசையை நிறைவேற்ற உங்களுக்கு முயற்சி ஏற்படும். அந்த முயற்சி இறுதியில் உங்களுக்கு வெற்றிகளாய் மாறும்.
ஆசையை விஸ்தரிக்க உங்களுக்குள் ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் வகுத்துக் கொள்ளுங்கள். அப்போது எளிதில் உங்கள் இலக்கை அடைய நீங்கள் முயற்சி செய்வீர்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்துவதை விட உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கிக் கொள்வதின் மூலம் வெற்றியாளர்களாக உலகில் வலம் வருவீர்கள்.
உலகில் பலரும் வாய்ப்பை இழந்து வருத்தப்படுகிறார்கள். இல்லையென்றால் வாய்ப்பே இல்லை என்று வருத்தப்படுகிறார்கள். அவர்களைப் போல நீங்கள் இருக்கக் கூடாது. எனவே தான் ஆசையை வளர்த்துக் கொண்டு உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள் என்று கூறுகிறேன்.
கடற்கரைக்கு அருகில் இருந்தாலும் வறண்டு போன நாவிக்கு அந்த கடல் நீர் உதவாது. அதுபோல தான் சில சமயங்களில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தராது. எனினும் நீங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்வதின் மூலம் தான் வெற்றி இலக்குகளை அடைய முடியும்.
எப்போதும் ஒரு வெற்றியும் எளிதில் அடைந்து விட முடியாது, என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கையில் ஆசைப்படுவதோடு தொடர்ந்து முயற்சியும் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு மிக நன்றாக புரியும்.
1 Comment
Yes really true words tq
Comments are closed.