உலகிலேயே மிக நீளமான பெயரை கொண்ட பெண் !!!
உலகின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஒரு பெண் 1019 எழுத்துக்களைக் கொண்ட இரண்டு அடி நீளமுள்ள பிறப்புச் சான்றிதழை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சான்ட்ரா வில்லியம்ஸ் 1984இல் பிறந்த தனது மகளுக்கு ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தார். பல யோசனைகளுக்கு பின் தனது மகளுக்கு உலகிலேயே நீளமான ஒரு பெயரை வைக்க வேண்டும் என எண்ணினார்.
சிறுமியின் பிறப்பு சான்றிதழில் அவளுக்கு Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams என பெயர் வைத்தார். இருப்பினும் மூன்று வாரங்களுக்கு பிறகு அந்தப் பெயர் போதுமான நீளம் இல்லை என முடிவு செய்து அந்தப் பெயரை மாற்றி 1019 எழுத்துக்கள் நீளமுடைய ஒரு புதிய பெயரை தனது மகளுக்கு வில்லியம்ஸ் வைத்துள்ளார். இதில் 36 எழுத்துக்கள் உடைய நடுத்தர பெயரும் (Middle Name) அடங்கும்.
இரண்டாவதாக தனது மகளுக்கு சான்ட்ரா வில்லியம்ஸ் சூட்டிய பெயரை கீழே வாசியுங்கள்.
Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarna erenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchelleca undenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenv aunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzad awnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaund rieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandaleccian nereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriet taescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemer ciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquani aenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavern ellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionne miariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentesc acraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtaw ndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadauri lessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoaj ohnyaetheodoradilcyana.
புரிந்துகொள்ளக்கூடிய வகையில், அன்றாட பயன்பாட்டிற்கான கவர்ச்சிகரமான ஒரு பெயராக இது இல்லை. எனவே அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவளை ஜேமி என்று அழைக்கிறார்கள்.
உலகிலேயே நீளமான பெயருடைய கின்னஸ் உலக சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே சான்ட்ரா வில்லியம்ஸ் தனது மகளுக்கு இவ்வளவு நீளமான பெயரை சூட்டியுள்ளதாக கூறுகிறார்.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
இந்த தனித்துவமான பெயரை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது சுவாரசியமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.