மனித உடலோட மொத்த எடையில் வெறும் இரண்டு சதவீதம் தானா மூளை..! – மூளை பற்றிய உண்மைகள்..!
மனித மூளையில் குறைந்த வார்ட் கொண்ட எல்இடி விளக்குகளை எரிய வைக்கும் அளவிலான மின்சாரம் உருவாக்கப்படுகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அது உண்மைதான்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் கணினியை விட விரைவாக சிக்கல்களை தீர்க்கக் கூடியது. மேலும் உங்கள் மூளையில் 260 எம்பி எச் வேகத்தில் தகவல்களை அனுப்பக்கூடிய ஆற்றல் படைத்தது.
மனித மூளையின் அதிசயமாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்ற கருத்து என்னவென்றால் ஏழு இலக்கை எண்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் இந்த மூளைக்கு உள்ளதாம்.
உங்கள் மூளையால் 2,500,00 ஜிகாபைட் அளவுள்ள தகவல்களை சேமித்து வைக்க முடியும். மேலும் மூளையில் 86 பில்லியன் முதல் 100 பில்லியன் வரை நியூரான்கள் உள்ளது.
மூளையின் நினைவுத்திறனை பார்க்கும் போது நீங்கள் பேசுவதை விட படங்களை அதிகளவு நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டது. ஒரு கணினிக்கு எப்படி சிபி யூ முக்கியமோ அதுபோல மூளையில் இருக்கும் கிரே மேட்டர் என்ற பகுதி தான் புத்திசாலித்தனத்தை நிர்ணயம் செய்யக்கூடிய பகுதியாக விளங்குகிறது.
பெண்களின் மூளையை விட பத்து சதவீதம் ஆண்களின் மூளை பெரிதாக உள்ளது. மேலும் மூளையானது 75% நீரினைக் கொண்டுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறையும் போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
இந்த அற்புத மூளையின் வளர்ச்சியானது 18 வயது வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் இது முழு வளர்ச்சியையும் எட்டி விடுகிறது.
மனித மூளையானது 20 வயதுக்கு பிறகு நினைவுத்திறன் மற்றும் அறிவாற்றலை இழக்க துவங்குகிறது. மேலும் நமக்கு வயதாகும் போது மூளையின் பகுதியானது சிறிதாகத் தொடங்கும்.
நாம் உயிர் வாழ பயன்படுத்துகின்ற ஆக்சிஜனை 20% ரத்தத்தையும் மூளை பயன்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு நிமிடமும் 750 இல் இருந்து ஆயிரம் மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற மூளையை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல செயல்களை எளிதாக செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் வெறும் 10% மூளையை மட்டும் பயன்படுத்துகிறோம் என்பது வெறும் கட்டுக்கதை தான். இரவில் உறங்கும் போது தான் அந்த பத்து சத மூளை பயன்படுகிறது.
1 Comment
அழகான பதிவு வாழ்த்துக்கள் ❤️
Comments are closed.