
namaskaram
இந்து மத கலாச்சாரத்தின் படி நமஸ்காரம் ஆனது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதும், பெரியவர்களை வணங்கும் பண்பாகும். இந்த நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது.
இதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இது உடலின் அனைத்து பாகங்களும், அதாவது உடலில் உள்ள அங்கங்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும்.
மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் பொதுவாக தாண்டா கார நமஸ்காரம் மற்றும் உதான நமஸ்காரம் என்றும் அறியப்படுகிறது. இந்து மதக் கோட்பாட்டின் படி தாண்டா என்கிற வார்த்தைக்கு குச்சி என்று பொருள். எனவே ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும்போது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல் தெரிவதால் இதற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனுடைய அர்த்தம் என்ன என்றால் ஒரு குச்சி விழுந்த நிலையில் எவ்வாறு உதவியற்ற இருக்கிறதோ அதே நிலையில் தான் மனிதன் இருக்கிறார். எனவே எனக்கு உன்னை சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை. நீயே எனக்கு தஞ்சம் என்று இறைவனை நோக்கி வேண்டுவதை குறிக்கிறது.
மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும். இது மனிதனுடைய அகங்காரத்தை அழிக்க கூடிய ஒரு வடிவமாகவும் திகழ்கிறது. நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் நமஸ்காரம் தான் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் என்று சொல்லப்படுகிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowசாஷ்டாங்க நமஸ்காரம் நம்முடைய அகங்காரத்தை நீக்கி அடக்கத்தை தரக்கூடிய ஒரு வழிபாட்டுமுறை என்றே சொல்லலாம். மேலும் இதை பின்பற்றும் நபரிடம் அடக்கம் உருவாகத் தொடங்கும். அப்படிப்பட்ட சாஷ்டாங்க நமஸ்காரத்தை பெண்கள் செய்யலாமா? என்ற கேள்விக்கு பதில் என்ன தெரியுமா?
இந்து மதத்தைப் புரட்டிப்பார்த்தால் நமது இந்து மத மரபின் படி பெண்கள் இந்த வகை நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் தரையில் படக்கூடாது. எனவே பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மட்டுமே செய்ய வேண்டும்.

பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்த்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு கால்களை தொட்டு வணங்குவது தான் பஞ்சாங்க நமஸ்காரம் ஆகும்.
பஞ்சாங்க நமஸ்காரம் என்பதில் பஞ்சம் என்றால் ஐந்தைக் குறிக்கும் பஞ்சபூதம் என்று கூறுகிறோம் அல்லவா, அது போல இங்கு பஞ்சம் என்பது பெண்களின் தலை, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை மட்டுமே குறிக்கிறது. எனவே தான் இதை பஞ்சாங்க நமஸ்காரம் என்று கூறுகிறோம்.
இந்து மத தர்மப்படி ஒரு பெண்ணின் கர்ப்பப் பையானது ஒரு உயிரை தாங்கும், உன்னத வேலையைச் செய்கிறது. அவளின் மார்பு குழந்தைகளுக்கு பாலூட்டும் பணியை செய்கிறது. எனவே அவை இரண்டும் தரையில் படக்கூடாது.
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் ஆணின் வயிறு தரையில் படவேண்டும். மேலும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள் உடல், மனம் மற்றும் பேச்சை குறிக்கும்.
எனவே இனி பெண்கள் நமஸ்காரம் செய்யும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்யுங்கள். அது மூன்று முறை அல்லது ஐந்து முறை ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்யலாம்.