• December 26, 2024

Biceps-ஐ வைத்து பழங்களை உடைக்கும் சாதனைப் பெண் !!!

 Biceps-ஐ வைத்து பழங்களை உடைக்கும் சாதனைப் பெண் !!!

சமீபத்தில் Guinness World Record நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது biceps-ஐ வைத்து ஆப்பிள்களை ஒரு பெண் சுலபமாக உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

உலகெங்கிலும் பல்வேறு மனிதர்கள் செய்யும் பல்வேறு உலக சாதனைகளை கண்டுபிடித்து அதற்கு அங்கீகாரம் வழங்குவதே கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் வழக்கம். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல வித்தியாசமான உலக சாதனைகளை உலக நாடுகளில் வசிக்கும் பல்வேறு சாதாரண மனிதர்கள் செய்து வருகின்றனர்.

Reaching for the stars: Poland's weirdest Guinness World Records - Kafkadesk

அமெரிக்காவை சேர்ந்த லிண்ட்ஸே லின்ட்பெர்க் எனும் பெண்மணி ஒரு நிமிடத்தில் பத்து ஆப்பிள்களை தனது பலத்தை வைத்து சுலபமாக உடைத்து காட்டுகிறார். இவர் செய்த உலக சாதனையின் வீடியோவானது உலகம் முழுவதும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது லிண்ட்ஸே இந்த சாதனைக்காக எத்தனை நாட்கள் பயிற்சி மேற்கொண்டு இருப்பார் என நம்மை யோசிக்க வைக்கிறது.

இதே போன்ற வேறு சில உலக சாதனைகளையும் லிண்ட்ஸே இதற்கு முன் நிகழ்த்தியுள்ளார். ஒரு நிமிடத்தில் அதிக சீட்டுக் கட்டுகளை கிழித்த பெண்மணி என்ற சாதனையையும் ஒரே நிமிடத்தில் அதிக டெலிபோன் டைரக்டரிக்களை கிழித்த பெண்மணி என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

இப்படியெல்லாம் கூட உலக சாதனைகள் நிகழ்த்த முடியுமா என நம்மை வியக்க வைக்கிறது லிண்ட்ஸேவின் இந்த சாதனை பட்டியல்.

லிண்ட்ஸே 10 ஆப்பிள்களை தனது biceps-ல் உடைக்கும் வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.