• November 21, 2024

விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும்?

 விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும்?

விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று

பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு.

90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும்.

இரண்டு

விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் அல்லது விபத்தும் ஏற்படலாம். சீட் பெல்ட் வயிற்று பகுதியில் தான் இருக்கும் ஆனால் தலை வேகமாக முன் சென்று முன் சீட்டில் முட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எல்லா இருக்கைகளும் ஒரே தூரத்தில் இருந்தால் விபத்தை குறைக்கலாம்.

படத்தில் இருக்கை வரிசைகள் இடையே உள்ள தூரம் குறைவாக இருப்பதை காணலாம்.

பின் சேர்க்கை

சில சமயங்களில் விமானத்தில் பிரச்சினை இருந்தால் அல்லது அவசரமாக இறங்க வேண்டியிருந்தால் பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள். அப்போது பிரேஸ் என்பார்கள். நன்றாக குனிந்து தலையின்மேல் கைகளை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். அப்போது முன்னால் உள்ள இருக்கை நேராக இருந்ததால் தான் அப்படி செய்ய முடியும்.

சாய்ந்து அமர்ந்திருக்கும்போது பயணிகளின் எடை பின் புறமாக அதிகரிக்கிறது. எனவே மேலேறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் நேராக இருக்கும்படி அறிவுறுத்த படுகின்றது. (இல்லாவிட்டால் சமநிலை பாதிக்கப்படும்)

இரு வருடம் முன்பு ஒரு விமானம் மேலேறி அதிக உயரத்தை எட்டும்போது, மேல் எழும்பாமல் வால் பகுதி கீழே இழுக்கப்பட்டு கடலில் விழுந்தது. காரணம் வால் புறம் அதிக சுமை ஏற்றப்பட்டதே.