பூனைகள் சதுர பெட்டியை விரும்பக் காரணம் என்ன? – ஆராய்ச்சியில் வெளி வந்த தகவல்..
பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாய்க்கு அடுத்த இடம் பூனைக்குத்தான். இந்த பூனைகள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவை ஒரு சதுர பெட்டியில் படுத்து உறங்குவதை பலமுறை நீங்கள் பார்த்து இருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த பூனைகள் செய்யும் சேட்டைகளை யாரும் மறந்து விட முடியாது. அப்படி வளரும் பூனைகளின் சேட்டைகளை நீங்கள் இன்ஸ்டா பக்கத்திலும், ரீல் பகுதிகளிலும் பதிவிடுவதை பார்த்து இருக்கலாம்.
சேட்டைகள் செய்து நம்மை மகிழ்விக்கின்ற பூனைகள் இது போன்ற சதுர பெட்டிகளில் படுத்து உறங்க என்ன காரணம்? இந்த சதுர பெட்டிகளை அவை ஏன் பெரிதும் விரும்புகின்றன என்பது போன்ற கேள்விகளுக்கு தற்போது நடந்த ஆய்வில் வெளி வந்த உண்மையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று பூனைகள் ஏன் சதுர வடிவில் இருக்கும் பெட்டிகளை அதிகளவு விரும்புகின்றன என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் பூனைகள் இப்படி பெட்டிக்குள் சென்று அடைந்து கொள்வதின் மூலம் அவற்றின் மன அழுத்தம் வெகுவாக குறைவதாகவும், சிறிய அளவில் இருக்கும் இந்த பெட்டிகள் பூனைகளுக்கு அதன் அம்மாவை நினைவூட்டு விதத்தில் உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.
அம்மா அருகில் இருந்தால் கிடைக்கக்கூடிய அரவணைப்பை போல இந்த சதுர பெட்டியில் படுத்து உறங்கும் பூனைகளுக்கு, தாயின் அரவணைப்பில் இருந்த தன்மை கிடைப்பதாக கால்நடைகளில் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நிபுணர் நிக்கோலஸ் போட்மேன் தெரிவித்திருக்கிறார்.
இதனால் தான் பூனைகள் அனைத்தும் சதுரமாக இருக்கும் பொருட்களின் மீது அதிக அளவு ஆர்வம் கொள்கிறது. அதாவது பெட்டிகளின் வடிவம் சதுரமாக இருப்பதால் அவை அதில் படுத்து ஆனந்தமாக அம்மாவின் ஆரவணைப்பில் உறங்குகிறது.
மேலும் வீட்டு தரையில் நாம் வீசும் காகிதம் மற்றும் சதுர வடிவில் இருக்கும் எந்த பொருளை பார்த்தாலும் அவற்றுக்கு உணர்ச்சி ஏற்படும் என்கின்ற உண்மையை அவர்கள் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து உங்களுக்கும் இது போன்ற ஏதேனும் புதிய விஷயங்கள் தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மேலும் பூனைகளின் குணாதிசயங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். விலங்குகளுக்கும் அம்மா பாசம் உள்ளது என்பதை இந்த ஆய்வு விளக்கமாக நிரூபித்து உள்ளது.