5 வினாடிகள் உலகம் சுழல்வது நின்றுவிட்டால் என்ன ஆகும் ??
ஒரு மணி நேரத்திற்கு 1600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமி திடீரென ஒரு ஐந்து வினாடிகளுக்கு சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்னவாகும் என கற்பனை செய்து இருக்கிறீர்களா. ஒரு வேளை உலகம் சுழல்வது ஐந்து வினாடிகள் நின்று விட்டால் என்னவெல்லாம் ஆகும் என்பதை பற்றிய பதிவுதான் இது.
இந்த உலகமானது அண்டத்திற்கு வெளியே ஏற்பட்ட பல்வேறு மூலப்பொருட்களின் மோதலால் சுழற தொடங்கியது. ஒரு நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் இந்த பூமி பல்வேறு உயிரினங்களின் வீடாக இருந்து வருகிறது.
இந்த உலகத்தில் நாம் உயிர்வாழ்வதற்கு அதன் சுழற்சி ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். 5 வினாடிகள் இந்த உலகம் சுற்றுவது நின்றுவிட்டாலும் வளிமண்டலம் சுழற்சியில் தான் இருக்கும். பூமியின் சுழற்சி திடீரென நிற்கும் பட்சத்தில் வளிமண்டலத்தின் சுழற்சியால் உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு பெரிய புயல் ஒன்று உலகெங்கும் வீசும்.
குறிப்பாக ஈக்குவேடார் பகுதிகளில் அதிகமான புயல் வீசக்கூடும். ஈக்குவேடார்-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் அளவு மணிக்கு 1670 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதுவரை உலகில் பதிவாகியுள்ள அனைத்து புயல்களையும் விட இது மூன்று மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமேசான் நதி வறட்சி: உலகின் நுரையீரல் அழிந்துவிடுமா? பூமியின் எதிர்காலம் கேள்விக்குறி!
- சதுர வடிவ விண்கல்: ஹோபா எரிக்கல்லின் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல்!
- வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் – ஒரு சிங்கத்தின் கடைசி பாடம்
- தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி!
- பெருமிதத்துடன் பதிலளித்த ஆபிரகாம் லிங்கன்
மணிக்கு 1600 கிலோ மீட்டர் வேகத்தில் சுழலும் பூமியானது நின்றுவிட்டால் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், மரங்களும், வீடுகளும் அதே வேகத்தில் பின்னோக்கி தூக்கி எறியப் பட வாய்ப்பு உள்ளது. உலகம் சுழற்வது நின்ற பின்பு வீசும் புயலானது பூமியின் மேல் ஓட்டை பிளக்கும் சக்தி வாய்ந்தது.
புயல் மட்டுமின்றி ஈக்குவேடார் பகுதியை சுற்றி வரலாறு காணாத பெரிய சுனாமி ஒன்று உருவாகி சுற்றி இருக்கும் அனைத்தையும் விழுங்கிக் கொள்ளும். இந்தப் பேரழிவை எதிர்கொண்டு உயிர்வாழ்வதற்கு பூமியின் வட மற்றும் தென் மண்டலங்களில் காற்று கம்மியாக வீசும் பகுதிகளில் நாம் வாசிப்பதே ஒரே வழியாகும். ஆனால் அங்கும் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு.
ஐந்து வினாடிகள் உலகம் சுற்றுவது நின்றுவிட்டால் அந்த ஐந்து வினாடிகளுக்கு பின் இந்த உலகில் எந்த ஒரு உயிரினமும், கட்டிடங்களும் இருக்காது. இன்னும் சில பில்லியன் வருடங்களுக்கு உலகம் சுற்றுவதில் எந்தவித தடையும் இருக்காது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
ஐந்து வினாடிகள் இந்த உலகம் சுழறாமல் இருந்தால் வாழ்வையே இழக்கும் கட்டாயத்திற்கு நாம் அனைவரும் தள்ளப்படுவோம். இத்தனை கோடி ஆண்டுகள் இந்த பூமி நிற்காமல் சுற்றி வருவதற்கு நியாயப்படி நாம் பூமி மாதாவிற்கு நன்றி கூறவேண்டும்.
இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.