“கர்ப்பப்பையை பலமாக்க செங்காந்தள்..!” – இவ்வளவு பயன்களா?
செங்காந்தள் செடியில் தோன்றும் மலரின் விதையில் கால்சிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது இந்த பொருளானது புற்றுநோய் பரவாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என மருத்துவர் விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் அதிக அளவு விளக்கி வாங்குகிறார்கள்.
பாரம்பரிய முறைப்படி இந்த செங்காந்தள் ஆனது பாம்பு கடி, தேள்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இதனுடைய கிழங்கும் மருத்துவ குணம் உள்ளது இதனை கண் வலி கிழங்கு என்று அழைப்பார்கள். இதனை ஜெர்மனிக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டின் தேசிய மலராக கருதக்கூடிய இந்த மலரை உற்றுப் பார்ப்பதன் மூலம் கண் வலி ஏற்படும் என்பதால் தான் இதனை கண் வலி கிழங்கு என்று அழைக்கிறார்கள். மேலும் இதனை காந்தல் மலர், கார்த்திகைப் பூ என்ற பெயர்களிலும் அழைப்பது வழக்கம்.
பிரசவ வலியை தூண்டக்கூடிய பொருளாக இருக்கக்கூடிய இந்த மூலிகை தலையில் இருக்கக்கூடிய பேன்களையும் வாதத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளையும் தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்டது.
இதனை நேரடியாக உட்கொள்வதின் மூலம் விஷத்தன்மை ஏற்படும் எனவே பக்குவமாக விஷத்தை பிரித்து எடுத்த பின்பு தான் மருந்தாக பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக ஆயுர்வேதம், சித்த, யுனானி போன்ற மருத்துவ துறையில் எந்த மூலிகை பெரிதளவும் பயன்பாட்டில் இருந்தது.
பெண்களுக்கு ஏற்படுகின்ற கர்ப்பப்பை பிரச்சனைகளை சீராக்குவதோடு மட்டுமல்லாமல் மாதவிடாய் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது.
மேலும் கடுமையான தலைவலி, கழுத்து வலி, வெண்குட்டம், வயிற்று வலி போன்றவற்றை சரி செய்யக்கூடிய தன்மை எந்த மூலிகைக்கு உள்ளது. தோல் நோய்களில் குறிப்பாக கரப்பானை தடுக்க கூடிய அற்புத ஆற்றல் இதற்கு உள்ளது.
இதில் இருக்கும் வேதிப்பொருட்களான கால் சிசி சுகர் பின் போன்றவை குடற்புழுக்கள் வயிறு உபாதைகள் போன்றவற்றிற்கு மிகச்சிறந்தாக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மூட்டு வலிக்கு மிக முக்கிய மருந்தாக பயன்படக்கூடிய, இது மூட்டுகளில் தங்கி இருக்கக்கூடிய யூரிக் அமிலத்தை கரைத்து வெளியேற்றக்கூடிய தன்மை கொண்டது. அது மட்டுமல்லாமல் யூரிக் அமிலத்தால் ஏற்படக்கூடிய படிமங்களை மூட்டுகளில் படிக்க விடாமல் பாதுகாக்கும்.