தற்கொலைகள் அதிகம் நடக்கும் டாப் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம்..
தற்கொலை என்பது இன்று அதிகமாக நிகழக்கூடிய சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உலகளாவிய மிகப்பெரிய பொது பிரச்சனையாக உருவெடுத்து இருக்கும் இந்த தற்கொலை வயதில் சிறியவர்கள் முதல், வயதானவர் வரை இருவகை பாலினத்தையும் பாதிக்கின்ற மிகப்பெரிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலை விகிதங்கள் ஒவ்வொரு நாட்டுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட வேறுபாட்டை கொண்டுள்ளது.
அந்த வகையில் இன்று அதிகளவு தற்கொலை நடக்கக்கூடிய டாப் 10 நாடுகள் என்னென்ன என்பது பற்றியும், தற்கொலையில் இந்தியாவின் நிலை என்ன? அவற்றின் இடம் என்ன? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தென்னாப்பிரிக்காவானது தற்கொலை செய்து கொள்வரின் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ஒரு லட்சம் பேருக்கு 23.5 பேர் இங்கு தற்கொலை செய்து கொள்வதால் உலகில் அதிக தற்கொலை நடக்கும் தென்னாப்பிரிக்கா விளங்குகிறது.
இதனை அடுத்து ஒரு லட்சம் பேரில் 25.1 தற்கொலைகள் என்ற விகிதத்தில் ரஷ்யாவானது ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. ரஷ்யாவில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவு தற்கொலைகளை செய்து கொள்கிறார்கள். எனவேதான் இங்கு ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது.
இதனை அடுத்து சுரினாம் என்பது கயானா, பிரேசில் மற்றும் பிரண்ட்ஸ் பகுதியில் இருக்கின்ற ஒரு சிறிய தென் அமெரிக்க நாடு இங்கு தற்கொலை விகிதமானது 25.4 என பதிவாகியுள்ளது. இங்கும் பெண்களை விட ஆண்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை அடுத்து இந்தப் பகுதிக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.
ஏழாவது இடத்தில் இருக்கும் லுதுவெனியா சோவியத் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு 31.9% தற்கொலை நிகழ்வாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளின் குழுக்களை மைக்ரோ நேசியா என்று அழைப்பார்கள். இங்கு போதிய வசதியின்மை காரணமாக ஒரு லட்சம் நபர்களில் 38.2% பேர் தற்கொலை செய்து கொள்வதாக தரவுகள் வந்துள்ளது. எனவே இதை டாப் 10 நாடுகளில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
இதே மத்திய பசுபிக் பகுதியில் அமைந்துள்ள திருப்பதி என்ற நாட்டில் 28.3% தற்கொலைகள் நிகழ்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இது இருப்பதால் எந்தளவு தற்கொலைகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தென்கொரியாவில் கொலை விகிதமானது 28.6 சதவீதமாக உள்ளது இதில் பெரும்பான்மையோர் முதியவர்களாக காணப்படுகிறார்கள். முதியவர்களை தவிர மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்காக அதிக அளவு அழுத்தம் ஏற்படுவதின் காரணத்தால் செய்து கொள்வது வாடிக்கையாக்கிவிட்டது.
இதனை அடுத்து எஸ்வதினி என்ற சிறிய பரப்புள்ள நாட்டை எடுத்துக் கொள்ளலாம். இங்கு தற்கொலை விகிதமானது 35.4 என உள்ளது. மேலும் கயானா பகுதியில் ஒரு லட்சம் பேரில் 40 புள்ளி மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.
முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் லெசோதோ என்ற சிறிய நாடு உள்ளது இங்கு ஒரு லட்சம் பேருக்கு 76 பேர் என்ற வகையில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிக அளவு தற்கொலைகள் செய்யக்கூடிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதி இதுதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாற்பதாவது இடத்தில் உள்ளது இங்கு ஒரு லட்சம் பேருக்கு 12.7 என்ற விகிதத்தில் தற்கொலை நடப்பதாக தரவுகள் உள்ளது.