“தீரன் சின்னமலை நினைவு நாள்” – வெள்ளையனை நடுங்க வைத்த வீரன்..
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான நபராக தீரன் சின்னமலை விளங்குகிறார். தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போர் புரிந்த மாவீரன் கொங்கு நாட்டின் ஒடாநிலை கோட்டையை கட்டி ஆண்டவன்.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் காங்கேயம், சென்னிமலை அருகே உள்ள செ. மேலப்பாளையம் எனும் ஊரில் 1756 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் இவர். கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காமல் வீறு கொண்டு அதை தடுப்பதற்காக எழுந்த மாவீரன்.
மக்களிடம் பெற்ற வரியை மைசூருக்கு கொண்டு செல்லும் அரசு பிரதிநிதியிடம் இருந்து வரி பணத்தை சென்னிமலைக்கும், சிவன் மலை மற்றும் சின்ன மலை பகுதியில் பறித்துப் போய்விட்டதாக போய் உன் அண்ணனிடம் சொல் என்று மிரட்டி பணத்தை பறித்த பின்னர் தான் இவருக்கு தீரன் சின்னமலை என்ற பெயர் ஏற்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை முற்றிலும் சுரண்டுவதை அடியோடு வெறுத்த மன்னர்களில் ஒருவராகத்தான் தீரன் சின்னமலை திகழ்ந்திருக்கிறார். குறிப்பாக கேரளம் மற்றும் சேலம் பகுதிகளில் ஆங்கிலேய படை ஒன்று சேராமல் பார்த்துக் கொண்டது இவரது பங்கு அளப்பரியது.
மைசூரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திப்பு சுல்தான் அரசராகப் பதவியேற்றார். திப்புவும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே நட்பு உண்டானது. இதனை அடுத்து திப்புவுடன் கைகோர்த்து போர் புரிந்திருக்கிறார் தீரன் சின்னமலை.
ஆங்கில எதிர்ப்பில் தீவிரம் திப்பு சுல்தான் வீர மரணம் அடைய தீரன் சின்னமலை மீண்டும் கொங்குநாடு திரும்பி ஓடாநிலை கோட்டை கட்டி போருக்கு தயாரானான். பிரெஞ்சுப் படை உதவியோடு ஆயுதம் தயாரித்தல் மற்றும் படை வீரர்களுக்கு தொடர் போர் பயிற்சி அளித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்.
தீரன் சின்னமலையை போரால் ஜெயிக்க முடியாது என்று முடிவு செய்த ஆங்கில படை வழக்கம்போல் அவரை கைது செய்து விசாரணை எனும் பெயரில் 1805 ஆம் ஆண்டு தூக்கிலிட்டு கொன்றது.
அவரின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர் விட்டுச் சென்ற பணிகளை இன்றைய இளைஞர்கள் மனதைக் கொண்டு செயல்படுத்தும் போது நிச்சயம் இந்தியா அனைத்து நாடுகளில் மத்தியில் ஒரு சிறப்பு அந்தஸ்தை பெறும்.
நமக்காக வாள் எடுத்துப் போராடிய தீரன் சின்னமலையை நினைத்து இன்றைய நினைவு நாளில், ஒரு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவரின் படத்திற்கு மலர் தூவி வணங்குவோம்.