சுக்கு vs இஞ்சி எதில் ஆரோக்கியம் அதிகம்? – விபரங்கள் உள்ளே..
இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு சுக்கு மற்றும் இஞ்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம் கட்டாயம் தெரிந்திருந்தால் மட்டும் தான் அதை எளிதில் பயன்படுத்தி ஆரோக்கியத்தை அடைய முடியும்.
மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்குக்கு இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவெனில் சுக்கானது உலர்ந்த நிலையில் இருக்கும் இஞ்சி தான். இஞ்சியை விட சுக்கில் தான் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனைப் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகின்ற செரிமான பிரச்சனைகளை சீர் செய்யக்கூடிய ஆற்றல் இந்த இஞ்சி மற்றும் சுக்குக்கு உள்ளது. மேலும் அஜீரண கோளாறுகளைத் தடுத்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய பணியை இந்த இஞ்சி சாறு, சுக்கு பொடியும் செய்யும்.
இஞ்சியின் மனமும் சுவையும் சற்று தூக்கலாக இருப்பதால் பாரம்பரிய இனிப்பு வகைகளில் சுக்கை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களுக்கு எளிதில் ஜீரணமாகும்.
இஞ்சியை விட சுக்கு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். சளியினை நீக்கி சுவாசப் பிரச்சனைகளை சீர் செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்ததாக உள்ளது.
இஞ்சியை சுக்கோடு ஒப்பிடும்போது இஞ்சியில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது.
உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலை புத்துணர்வாக வைத்துக்கொள்ள இஞ்சி டீ மற்றும் இஞ்சி தண்ணீர் உதவி செய்கிறது.
இஞ்சியை பயன்படுத்தும் போது அதன் தோலை நீக்கி தான் பயன்படுத்த வேண்டும். சுக்கினை தோல் சீவாமல் பொடித்து கஷாயமாக குடிக்கலாம். தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் நீங்கள் சுக்கு தண்ணீர் அல்லது இஞ்சி தண்ணீர் பருகுவதின் மூலம் உங்கள் உடல் எடை குறைய கூடிய வாய்ப்புகள் உள்ளது.
முதலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடிய தன்மை இவை இரண்டுக்கும் உள்ளதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் இதனை எடுத்துக் கொள்வதின் மூலம் நன்மை அடையலாம்.
எனவே உங்கள் உணவில் எதை செய்தாலும் இஞ்சி மற்றும் சுக்கினை சேர்த்து செய்வதின் மூலம் மிகப்பெரிய நன்மையை அடையலாம்.