ஒரு பேப்பர் 2.5 கோடி ரூபாயா ?
உலகிலேயே செல்போன் விற்பனையிலும் கணினி விற்பனையிலும் மாபெரும் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ பற்றிய ஒரு சுவாரசிய பதிவு இது.
ஆப்பிள் நிறுவனத்தை சொந்தமாக ஆரம்பிக்கும் முன் தன் வாழ்வில் பல தடைகளையும் கஷ்டங்களையும் ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்து வந்துள்ளார். அவருடைய வரலாறு பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்.
தனது 56 வயதில் இந்த உலகை விட்டு சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் பல பொருட்கள் அவரது மறைவுக்குப் பின் ஏலம் விடப்பட்டு வந்தது. அந்த வகையில் வேலை கோரி ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய மனு ஒன்று சமீபத்தில் இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் இரண்டரை கோடிக்கு ஏலம் போயுள்ளது.
தனது வாழ்நாளில் வேலை கோரி ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதி அனுப்பியுள்ளார். அந்த விண்ணப்பத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பெயர், முகவரி, படிப்புத் தகுதி, பிறந்தநாள் ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் அந்த விண்ணப்பத்தில், ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு மின்னணு தொழில்நுட்பம், வடிவமைப்பு பொறியியல் போன்ற துறைகளில் சிறப்பு திறமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விண்ணப்பம் 1993ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஸ்டீவ் ஜாப்ஸிடம் அலைபேசி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் இந்த விண்ணப்பத்தில் அலைபேசி எண் தன்னிடம் இல்லை என்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிய விண்ணப்பமானது இத்தனை ரூபாய்க்கு ஏலம் போகும் என ஸ்டீவ் ஜாப்ஸ் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஒரு தனிநபரின் வெற்றியும் புரட்சியும் அவரின் மதிப்பை காலங்கள் கடந்தும் உச்சத்தில் ஏற்றி வைத்திருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை கோரி அனுப்பிய விண்ணப்பத்தை கீழே காணுங்கள்.