
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்.. தமிழோடு பிறந்து, தமிழால் பிழைத்து, தமிழுடன் வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் Deep Talks Tamil இன்றோடு தனது மூன்று ஆண்டு பணிகளை சீரிய முறையில் சிறப்பாக முடித்து, நான்காம் ஆண்டு, உங்களின் மிகப்பெரிய ஆதரவோடு அடி எடுத்து வைத்துள்ளது.
அன்னை தமிழால் வளர்ந்திருக்கும் இந்த வலைத்தளமானது, தமிழை உலகிற்கு இணையத்தில் இருந்து உங்கள் இதயத்தோடு இணைத்து விட்டது என்று கூறலாம்.
தமிழனின் தொன்மையை, விஞ்ஞான திறமையை, உலகிற்கு பறைசாற்றுகின்ற ஊடகப் பணியை சிறப்பாக ஆற்றி இருக்கும் இந்த வலைத்தளத்தை “தீபன்” மற்றும் “கிருஷ்ணா” – வின் நீண்ட நாள் கனவு என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அப்துல் கலாம் சொன்னது போல இவர்களது கனவு இன்று சாத்தியம் ஆகிவிட்டது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
இவர்களின் இந்த கனவை சிறப்பாக செயல்படுத்த கொரோனா காலகட்டம் இவர்களுக்கு உதவி செய்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால் வியப்பாகத்தான் இருக்கும். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைத்தான் இவர்கள் தன்னம்பிக்கையோடு உணர்த்தி இருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் பலரும் விடியாத இரவு என்று முடங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டிலிருந்தே பணிகளை செய்து கொண்டு, இவர்களின் கனவுக்கான பாதையை வடிவமைத்து, இன்று பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கின்ற ஒரு வலைத்தளமாக இதை மாற்றி ஒரு விஸ்வரூப வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.
இவர்களின் ஆரம்பமே ஒரு அமர்களமாகத்தான் இருந்தது எனக் கூற வேண்டும். இதற்கு காரணம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு நாளன்று அதாவது 05.02.2020 ஆம் ஆண்டு You tube பக்கத்தை ஆரம்பித்தார்கள்.
அந்த You tube பக்கத்தில் இவர்களுடைய முதல் பதிவே சங்க தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் பற்றிய அறியாத விஷயத்தை உலகிற்கு தனது உன்னத குரலால் எடுத்துச் சொன்னது தான். அதுவும் இவர் குரலில் தமிழுக்கும், தமிழருக்கும் வணக்கம் என்று சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழனை பரவசப்படுத்தி, எழுந்து அமர வைக்கும். அது மட்டுமல்லாமல் கூர்ந்து கவனிக்கவும் வைத்தது.
எனினும் இந்த வலைதளத்தை ஆரம்பித்த போது சரியாக வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும் உழைத்தார்கள். காலம் கனிந்தது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக முன்னேற்றம் வந்து சேர்ந்தது.
இவர்களது வலைத்தளத்தில் தமிழைப் பற்றியும், சங்கத் தமிழர்கள் பற்றியும், சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து மிக வேகமாக வளர்ந்த இந்த வலைத்தளமானது 12.07.2020 – ல் 50,000 சப்கிரைப்பர்களை பெற்றது.
இது உங்களால் தான் சாத்தியமானது. மேலும் இவர்கள் கனவின் தொடர் உந்துதலால், நீங்கள் மீண்டும் அவர்களை ஆதரித்து, மென்மேலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு 20.07.2020 அன்று You tube பக்கத்தின் வழியாக ஐம்பதாயிரம் மக்களின் முன்னிலையில் www.deeptalks.in என்ற வலைதள பக்கத்தை ஆரம்பித்தார்.
அது மட்டுமல்லாமல் இந்த வலைத்தளத்தில் அனைவரது பங்களிக்கும் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திறமையான நபர்களிடமிருந்து கவிதைகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும், சிறப்பு கட்டுரைகளும் இந்த வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது.
டிஜிட்டல் முறையில் தமிழையும், தமிழனையும் அவனது சிந்தனையையும் சிறப்பாக செயல்பட வைக்க இந்த வலைத்தளம் உதவி செய்கிறது என்றால் அது மிகையாகாது. இன்று இருக்கும் இளம் தலைமுறைக்கு நமது மொழியின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் பக்குவமாக சேர்க்கின்ற டிஜிட்டல் மீடியா இதுவாகத்தான் இருக்கும் என்று ஐயம் இல்லாமல் சொல்லலாம்.
அந்த வகையில் மேலும், மேலும் தமிழை வளர்க்கவும், தமிழரை இணைக்கவும் இந்த வலைத்தளம் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. இன்று நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் எங்களின் பயணம் தொடரும் .. அதற்கான ஆதரவு உங்களிடம் இருந்து கட்டாயம் கிடைக்கும் என நம்புகிறோம்.
மேலும் உங்களின் மேலான ஆதரவை எங்களுக்குத் தந்து மீண்டும் எங்கள் கனவினை சிறகு விரித்து பறப்பதற்கு நீங்கள் சிறகுகளாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு எங்களது பயணத்தை தொடர்கிறோம்…
இது நாள் வரை எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எட்டுத்திக்கும் தமிழ் வெல்ல சங்கே முழங்கு…