சித்தர்கள் செய்த சித்திக்கள் வேதியியல் சார்ந்ததா? – ஓர் விளக்கம்..!
சித்தர்கள் பற்றி அதிக விளக்கமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாள் ஒரு மேனியும் புதுப்புது செய்திகளில் நீங்கள் சித்தர்களைப் பற்றி படிக்க தெரிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் சித்தர்கள் செய்கின்ற சித்திக்கள் பல உண்டு. இந்த சித்தர்கள் தியானத்தை அதிகப்படுத்தி ஞானம் அடைந்தவர்கள் என கூறலாம். இந்த சித்தர்களுக்கு உள் மனதை அறிந்து கொள்ளக்கூடிய அளப்பரிய ஆற்றல் உண்டு.
இவர்கள் யோகக் கலையை பயன்படுத்தி பலவிதமான சித்துக்களை செய்வார்கள். குறிப்பாக எட்டு வகை சித்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அவை முறையே அணிமா, மகிமா, லகிமா ஆகிய மூன்றும் உடலால் செய்யப்படக்கூடிய சித்திகள் ஆகும். கரிமா,ப்ராப்தி,பரகாம்யம்,ஈசத்துவம்,வசித்துவம் ஐந்தும் மனதால் செய்யக்கூடிய சித்திகள் ஆகும்.
இந்த அஷ்டமா சித்திகளை பெற வேண்டுமானால் சித்தர்கள் அனைவரும் 12 ஆண்டுகள் கடுமையான தவத்தை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மேலும் ஐம்புலன்களை அடக்கி அவற்றின் உணர்ச்சிகளை வெளியே செல்ல விடாமல் வைக்கக்கூடிய இந்த பயிற்சியை மேற்கொண்ட சித்தர்களுக்கு மட்டுமே இத்தகைய சித்திகளை செய்ய முடியும்.
இந்த எட்டு வகையான சித்திகளையும் பயன்படுத்திய சித்தர்கள் உடலில் இருக்கக்கூடிய வேதியல் பொருட்களைக் கொண்டே அனைத்தையும் கட்டுப்படுத்தி இருப்பார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
அதற்கு காரணம் உடலில் ஓடக்கூடிய சகல நாடிகளையும், ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்க கூடிய ஆற்றல் அவர்களது தியான பயிற்சி மூலம் கிடைத்து விடுகிறது. இதன் மூலம் உடலில் பரவி இருக்கும் நாகன் வாயுவை கட்டுப்படுத்தி இத்தகைய சித்துக்களை அவர்களால் செய்ய முடிந்துள்ளது.
இதற்கு உடலில் இருக்கும் பல்வேறு வாயுக்களான உதான மற்றும் அபான வாயுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் இவர்கள் ஆகாயத்தில் பறக்க கூடிய வல்லமையும், நீரில் நடக்கக்கூடிய ஆற்றலையும் பெற்றிருக்கிறார்கள்.
இதன் மூலம் தான் கருவூரார், சுந்தரனார் போன்ற சித்தர்கள் ஆகாய மார்க்கமாக சீன நாட்டுக்கு சென்று வந்திருக்கிறார்கள். மேலும் அகத்தியரும், ஆகாய மார்க்கமாக வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை பரப்பியதும், வைத்திய நூல்கள் தந்ததும், இந்த இலகிமா ஆற்றல் மூலம் தான்.
எனவே பஞ்சபூதங்களைப் பயன்படுத்தி நம் உடலில் இருக்கும் அத்துணை விஷயங்களை கட்டுப்படுத்தி வெற்றி கொண்ட சித்தர்கள், இதுபோன்ற சித்துக்கள் செய்வதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.
1 Comment
மிகவும் அருமை. மேலும் இதான் தொரச்சியாக 18சித்தர்களைப் பற்றியும் விளக்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நன்றி
Comments are closed.