“கைலாய மலையை போல் வேறு சில புனித மலைகள்..!” – மலைப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்..
இன்று வரை கைலாய மலை மட்டுமே புனிதமான மலை என்று கருதக்கூடிய சூழ்நிலையில், இந்த மலையைப் போல உலகில் வேறு சில பகுதிகளில் புனித மலைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த புனித மலைகளும், ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கக் கூடிய பகுதிகளாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. அப்படி திகழக்கூடிய அந்த புனித மலைகளின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் முதலாவதாக நீங்கள் படிக்கப் போவது ஆதோஸ் மலை பற்றிய விவரங்கள் தான். இந்த ஆதோஸ் மலையானது ஆன்மீக ரீதியாகவும், கலைக்கும் மிகவும் முக்கியமான மலையாக உள்ளது என்று கூறலாம்.
கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் பைசாண்டையர் காலத்தைச் சேர்ந்த சிலை உள்ளது. துறவிகள் அதிகமாக சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த மலைக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது சினாய் மலை பற்றியதாகும். மிகப்பெரிய மலைப்பாறைகளால் சூழப்பட்டு இருக்கக்கூடிய இந்த மலை எகிப்து நாட்டில் உள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் இந்த மலை பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. இயற்கையை விரும்புபவர்களும், புனித யாத்திரையை மேற்கொள்பவர்களும் இந்த மலைக்கு இன்று வரை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக ஆஸ்திரேலியாவில் நடுவில் இருக்கும் உளுரு என்ற பழங்குடி மக்கள் அதிக அளவு வசிக்கின்ற மலை பற்றி பார்க்கலாம். இந்த மலையை ஆன்மீக சக்தி நிறைந்த கடவுளாகவே வணங்குகிறார்கள்.சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் இதன் நிறம் மாறி அற்புதமான காட்சிகள் தோன்றும்.
நான்காவதாக ஒலிம்பஸ் என்ற கிரேக்கர்களின் புனித மலையை தான் வணங்கி வருகிறார்கள். இந்த மலையின் உச்சியில் 12 ஒலிபியன் கடவுள்கள் வாழ்ந்ததாக இன்று வரை நம்பிக்கைகள் நிலவுகிறது.
ஐந்தாவதாக ஜப்பான் நாட்டில் இருக்கும் புனித மலையான ஃபூஜி மலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த மலை புத்த பிட்சுகள் இடையே புகழ் பெற்றது. ஜப்பானில் மிகப்பெரிய மலையாக கருதக்கூடிய இந்த மலையை ஏராளமான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்விக்கிறார்கள்.
மேலும் துருக்கியில் இருக்கக்கூடிய அரரட் மலையில் (Ararat) தான் நோவாவின் படகு இறுதியில் இறங்கியதாக கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளது. மேலும் இங்கிருக்கும் எரிமலை புனிதத்துவமாக கருதப்படுகிறது.
இமயத்தில் இருக்கும் கைலாய மலை போல வேறு சில மலைகளின் புனிதத்துவத்தைப் பற்றி நீங்கள் தற்போது மிக சிறப்பான முறையில் அறிந்திருப்பீர்கள். இது போல வேறு மலைகள் பற்றிய விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதைப்பற்றிய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.