யார் இந்த சனகாதி முனிவர்கள்? – இவர்களின் அற்புத சக்தி என்ன?
பிரம்மாவால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகளை தான் சனகாதி முனிவர்கள் என்கிறோம். இவர்களுக்கு பிரம்ம குமாரர்கள் என்ற பெயரும் உண்டு. இந்து சமயத்தில் கூறப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்களின் படி உலகம் முழுவதும் இந்து தர்மத்தை பரப்பியவர்கள் தான் இந்த சனகாதி முனிவர்கள். இந்த நான்கு முனிவர்களின் பெயர் சனகர்,சனாநந்தர்,
சனத்குமார்,சனத்சுஜாதியர் ஆகும். இந்த சனக்குமாரர் பிரம்ம தத்துவத்தை நாரருக்கு நாரதருக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.
சைவ சமயத்தில் யோக நிலையில் சின்முத்திரையைக் காட்டி அமர்ந்திருக்கும் தட்சணாமூர்த்தி இடம் சனாகாதி முனிவர்கள் ஆத்ம வித்தையை மௌனமாக அறிந்து கொண்டவர்கள் தான்.
பிரம்மா தனது படைப்புத் தொழிலுக்கு உதவிகரமாக இருப்பதற்காகத்தான் இந்த நான்கு முதல்வர்களையும் படைத்ததாக கூறப்படுகிறது. எனினும் இவர்கள் தன் தந்தைக்கு கீழ்படியாமல் முனிவர்களாக மாறிவிட்டார்கள்.
இதனை அடுத்து தனது சொல் கேட்காத பிள்ளைகளை நினைத்து பிரம்மா மிகவும் வேதனை அடைந்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கோட்பாட்டை கடைபிடிக்க தவறிய இந்த நான்கு குழந்தைகளும் அதிகமாக வழிபடாத நிலையில் இருப்பதற்கு காரணமாக இதைத்தான் கூறுகிறார்கள்.
நான்கு வயதிலேயே இந்த சன காதி முனிவர்கள் வேதத்தை கற்று அறிந்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் ரிக், யஜுர், சாம மூன்று வேதங்கள் மட்டுமே இருந்தது. நித்திய இளமையோடு இருக்கக்கூடிய இந்த நான்கு பேரும் மிகச் சிறந்த சுய ஒழுக்கம் கொண்டவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் ஞானம், தூய்மை, பக்தி மற்றும் பிரபஞ்ச ஒழுக்கத்தை தொடர்புடைய அனைத்திலும் மிகச் சிறப்பாக விளங்கக்கூடிய முனிவர்களாக திகழ்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் பக்தியை உருவாக்கவும் அதை பரவலாக்கவும் இவர்கள் பணியாற்றுகிறார்கள்.
எனவே மனித குலத்தின் முதல் ஆசிரியராக இவரை கூறுகிறார்கள். இவர் தான் மனித குலத்திற்கு தேவையான ஆன்மீக தத்துவ விஷயங்களை கற்று தருவதாகவும் கருத்துக்கள் உள்ளது.
இவர்களின் மிக முக்கியமான சிறப்பாக கருதப்படுவது என்னவெனில் வளிமண்டலத்தை சுத்தப்படுத்தவும், ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அடக்கவும், சனகாதி முனிவர்கள் செய்யக்கூடிய ஹோமங்கள் திகழும் என்று வரை நம்பப்படுகிறது.
இவர்களின் மூலம் நமது வாழ்க்கை வளமாகவும், அமைதியாகவும் நகரும். மேலும் நோய்கள், வறுமை, மனச்சோர்வு போன்ற சிக்கல்களில் இருந்து விடுபட உதவி செய்கிறது. செழிப்போடு ஆரோக்கியத்தை தரக்கூடிய வல்லமை இந்த முனிவர்களுக்கு உண்டு.
இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் சனகாதி முனிவர்கள் யார்? அவர்களின் அற்புத சக்தி என்ன என்று.. இது போன்ற விடயங்கள் உங்களுக்கும் தெரிந்திருந்தால் எங்களோடு அதை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.