“செஸ் உலகக்கோப்பை பிரக்ஞானந்தா..!”- கார்சல்சனை வெல்வாரா..!
சதுரங்க போட்டியில் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கும் சாதனை நாயகன் பிரக்ஞானந்தா தற்போது உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று பெருவாரியான மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
அந்த வகையில் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இவரது விளையாட்டு இருக்குமா இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டி வருவாரா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் பிறந்து வளர்ந்த பிரத்தியானந்தாவின் தந்தை தமிழ்நாடு ஸ்டேட் கார்ப்பரேஷன் வங்கியின் ஊழியராக இருக்கிறார். இவரது தந்தை போலியோவார் செரு வயதிலேயே பாதிக்கப்பட்டதின் காரணத்தால் பிரக்யானந்தாவை செஸ் போட்டிகளுக்கு அழைத்து சென்றது அவரது தாயாரான நாகலக்ஷ்மி.
மூன்று வயதில் இருந்தே செஸ் விளையாட ஆரம்பித்த இவருக்கு பயிற்சி அளித்தவர் கிராண்ட் மாஸ்டர் ஆர் பி ரமேஷ். பிரக்ஞானந்தாவின் செஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிதான். இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.
இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மாஸ்டராக சாதனை படைத்தார் மேலும் 2018 ஆம் ஆண்டில் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார்.
மேலும் இவர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையதள போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.
இதற்கு முன் கார்ல்சனை விஸ்வநாத ஆனத்தும், பெண்டாலா ஹரி கிருஷ்ணாவும் வீழ்த்தி இருந்தார்கள். இதனை அடுத்து பிரக்ஞானந்தா மூன்றாவது இந்தியராக கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டு வீரரான பிரக்ஞானந்தா உலகின் நம்பர் ஒன் வீரராக கருதப்படும் மேக்னஸ் காரர்சனை எதிர்த்து விளையாடி வருகிறார்.இந்த போட்டியானது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை போட்டியாகும்.
மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட இந்த இரண்டாவது கட்ட ரவுண்டில் பிரக்யானந்தாவிற்கும் மேக்னஸ் காரல்சனுக்கும் இடையே ஆன போட்டி டிராவில் முடிந்தது.