“பிள்ளைகளின் படிப்பு.. அக்கறையில்..!” – பெற்றோர்கள் செய்யும் தவறுகள்..
கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.. என்ற சொற்றொடருக்கு ஏற்ப எதிர்காலத்தில் தங்களது பிள்ளைகள் சீரும் சிறப்புமாக வரவேண்டும் என்று எண்ணத்தில் பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதீத அக்கறை காட்டக்கூடிய பெற்றோர்கள் என்று அதிகளவு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் அவர்களைத் தாண்டி எடுத்துக் கொள்ளக்கூடிய அக்கறையானது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகளாக மாறும் என்றால் அது உங்களுக்கு கட்டாயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
எனினும் நீங்கள் காட்டக்கூடிய உச்சகட்ட அக்கறையானது சில சமயங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது போன்ற எதிர்மறையான தாக்கத்தை பெற்றோர்கள் தவிர்க்க அந்த தவறுகளை செய்யாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உங்கள் குழந்தைகள் சிறப்பாக படிக்க கல்வி தொடர்பான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் முடிவு செய்வதை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து நீங்கள் தீர்மானிப்பதின் மூலம் அவர்கள் சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கைக்கு இழப்பு ஏற்படக்கூடிய வழியை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தையின் கற்றல் அளவை மாற்று குழந்தைகளோடு ஒப்பீடு செய்வதை தவிர்க்க வேண்டும். சுயமரியாதையை அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய அளவு நீங்கள் நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மனதில் தேவையற்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்த சொல்லுவது மிகவும் தவறான வழிகாட்டுதல் ஆகும். கல்வி அல்லாத திறன்களை கற்க கட்டாயம் அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்துவதின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அது ஒரு காரணியாக இருக்கும்.
இப்படித்தான் படிக்க வேண்டும் என்ற கட்டளை செயல் முறையை அவர்களுக்குள் நீங்கள் புகுத்த கூடாது. அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கும். அந்த ஸ்டைலை பயன்படுத்தி அவர்கள் படிப்பதை நீங்கள் ஊக்குவிப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உங்கள் குழந்தைகளோடு பகிர்ந்து ஒவ்வொரு தினமும் மனம் விட்டு பேசுவதின் மூலம் அவர்களது மன இறுக்கம் தளரும், தனிமை உணர்வு குறையும்.
ஆசிரியர்கள் மட்டுமே குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள் என்று நினைக்காமல் குழந்தைக்கு தேவையான கல்வி தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதில் பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவு ஈடுபடுவது அவர்களது வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்யும் போது தண்டனை கொடுப்பது தவறு இல்லை. எனினும் மனதில் பயத்தை உண்டாக்குவதோடு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையை இது சற்று தள்ளிப் போட வைக்கும். எனவே குழந்தைகளுக்கு கட்டாயம் புத்திமதி கூறி அவற்றை அவர்களை தனித்து நிற்கக்கூடிய முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
குழந்தைகளிடையே மன அழுத்தம் கவலை ஏற்பட்டால் கற்றலில் சிரமம் ஏற்படலாம். எனவே இது அவர்களின் கற்றல் திறனை பாதிக்காமல் இருக்க நீங்கள் அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்தோடு கல்வியிலும் அவர்கள் ஆர்வத்தோடு பயிலக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
மேற்கூறிய வழிமுறைகளை பெற்றோர்கள் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் தங்களது குழந்தைகளின் கல்வித்திறனை மட்டுமல்லாமல் உடல் நிலையும் மனநிலையையும் மேம்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.