ஒரே ஒரு Oreo Biscuit 74 லட்சம் ரூபாயா !!!
ஒரு ஓரியோ பிஸ்கட் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினசரி வாழ்வில் விரும்பி சாப்பிடும் ஒரு Snack-ஆன பிஸ்கட் இவ்வளவு அதிகமான விலைக்கு விற்கப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போக்கிமான் திரைப்படத்தின் Mythical Mew என்ற கதாபாத்திரத்தின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே ஒரு சிறப்பு ஓரியோ பிஸ்கட் ஒரு பிரபல இணைய வணிக வலைத்தளத்தில் ரூபாய் 7000 முதல் 74 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.
இந்த கதாபாத்திரம் பதித்த பிஸ்கட்டுகள் ஓரியோ நிறுவனத்தால் குறைந்த அளவில் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்கப் படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்னதான் அரியவகை பிஸ்கட் ஆக இருந்தாலும் அதை லட்சக்கணக்கில் விற்பது சரியா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். சாதாரண ஓரியோ பிஸ்கட்டில் ஓரியோ என்ற பெயருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
Mythical Mew கதாபாத்திரம் பொறிக்கப்பட்டுள்ள ஓரியோ பிஸ்கட்-ன் புகைப்படத்தை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.