• November 22, 2024

அட… அணுகுண்டு விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) உச்சரித்த பகவத் கீதை வார்த்தை – படிக்கலாமா?

 அட… அணுகுண்டு விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) உச்சரித்த  பகவத் கீதை வார்த்தை – படிக்கலாமா?

Oppenheimer

உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட நிகழ்வானது நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ பாலைவனத்தில் நிகழ்ந்தது. ஆம். இந்த மணல் பரப்பில் தான் டிரினிட்டி (Trinity) என்ற ரகசிய பெயரில் உலகின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடந்து உலக வரலாற்றையே உலுக்கியது என்று கூறலாம்.

 

இந்த அணுகுண்டை வடிவமைத்து உருவாக்கிய மன்ஹாட்டன் இன்ஜினியர் டிஸ்ட்ரிக்ட் என் அறிவியல் விரிவான ப்ராஜெக்ட் Y-யின் இயக்குனராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

 

மேலும் இவருடன் 1945 ஆம் ஆண்டிலிருந்து ஓப்பன்ஹெய்மரின் (Oppenheimer) வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை வரலாற்று ஆசிரியர்களான பேர்ட் மற்றும் மார்ட்டின் ஜே ஷெர்வின் 2005 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்று புத்தகமான அமெரிக்கன் ப்ரோமிதியஸ் புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

இந்த அணுகுண்டு வெடித்த சமயத்தில் ஓப்பன் ஹேய்மர் (Oppenheimer) மிகுந்த கலைப்போடு இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது உடல் எடையும் குறைவாக இருந்ததாம். மேலும் அணுகுண்டு சோதனை நடந்த நாளின் முன் இரவில் சிறிது நேரம் மட்டுமே தூங்கி இருக்கிறார்.

 

இவர் மனதில் ஏற்பட்ட கவலை மற்றும் இருமல் பாதிப்பால் இவருக்கு பெரிய அளவு தூக்கம் அன்று ஏற்படவில்லை. இதனை அடுத்து அணுகுண்டு சோதனைக்காக நிமிடங்கள் எண்ணப்பட்டு இருந்தபோது இவர் மிகவும் பதட்டமாக இருந்ததாக பேர்ட் மற்றும் ஷெர்வீன் கூறி இருக்கிறார்.

 

சுமார் 21 கிலோ டன் சக்தி கொண்ட டி என் டி விசையோடு உலகத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்கிறாத அளவு மிகப்பெரிய அணுகுண்டாக  இருந்தது. இது வெடித்த போது சூரியனை விட ஒளி மிகுந்ததாகவும், இதன் அதிர்வை சுமார் 160 மைல் அளவு அனைவரும் உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனை அடுத்து வந்த நாட்களில் ஓப்பன் ஹெய்மர் (Oppenheimer) அதிக மன அழுத்தத்தோடு இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் குழப்பமான மனநிலையோடு இருந்த இவர் ஜப்பானிய மக்களுக்காக கவலைப்பட்டிருக்கிறார்.

 

 ஜப்பான் மக்கள் என்ன செய்வார்களோ என அந்த நாள் காலை துவங்கி மாலை வரை புலம்பிக் கொண்டு தவித்ததாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர் ராணுவ நண்பர்களோடு சந்திப்பை ஏற்படுத்திய பிறகு ஜப்பான் மக்களை மறந்து விட்டதாக வரலாற்று ஆசிரியர்களான பேர்ட் மட்டும் ஷெர்வின் கூறி இருக்கிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த வெடிகுண்டை சரியான சமயத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும் நேரத்தில் அந்த குண்டை ஜப்பானில் போட்டு விடக்கூடாது எனவும் வெகு உயரத்தில் இருந்து வீசினால் சேதம் குறைவாக இருக்கும். எனவே தக்க உயரத்திலிருந்து வீசி தாக்க வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஒரு ட்ரினிட்டி அணுகுண்டு சோதனைக்கு பின் ஒரு மாதம் கழித்து தான் ஜப்பானில் இருக்கும் ஹிரோஷிமா பகுதியில் இந்த குண்டு வீச்சு நடந்ததாக தெரியவந்துள்ளது. அந்த அணுகுண்டை செயல்படுத்த அறிவாற்றல் மிக்கவராக ஓப்பன் ஹெய்மர் இருந்திருக்கிறார்.

 

மேலும் இவர் லாஸ் அல்மோஸ் வெடிகுண்டு சோதனை திட்டத்தின் இயக்குனராக இல்லாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு தாக்குதலை பார்க்காமலேயே முடிவுற்றிருக்கும் என்ற செய்தியை 2004 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதிய போது தெரிவித்து இருக்கிறார்கள்.

 

இவர் உழைப்பின் பலனை கண்டபோது அதற்கான எதிர்வினைகளை கணக்கிட்டதாகவும் கூறலாம். மேலும் பேர்ட் மட்டும் ஷெர்வின் இவரை ஒரு புரியாத புதிர் என்றே அழைத்திருக்கிறார்கள்.

 

1904 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த ஓப்பன் ஹெய்மர், ஜவுளி வர்த்தகத்தின் மூலம் பணக்காரர்களாக இருந்த முதல் தலைமுறை ஜெர்மன் யூத குடியேறியவர்களின் குழந்தையாக பிறந்தார். செல்வ செழிப்பில் வளர்ந்தாலும் நண்பர்களுக்கு தாராளமாக உதவி செய்யும் மனப்பான்மையைக் கொண்டிருந்தார்.

 

ஒன்பது வயதுக்குள்ளேயே இவர் கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளில் இருக்கக்கூடிய தத்துவங்களை படித்ததோடு கனிமவியலில் அதிக ஆர்வத்தோடு இருந்தார். ஹேவாட் பல்கலைக்கழகத்தில் வேதியல் படிப்பதற்காக அவர் வீட்டை விட்டு சென்றிருக்கிறார்.

Oppenheimer
Oppenheimer

இந்த சூழ்நிலையில் இடையில் இவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும் இந்த மனநிலை பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள மனநல மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் எந்த பயனும் அவருக்கு கிடைக்கவில்லை.

 

இவர் மார்ஷல் ப்ரூஸ்டின் புத்தகத்தை படிக்கும் போது அவரது மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவதை கண்டதாகவும், அதனை அடுத்து இவருள் ஒரு மன உறுதி ஏற்பட்டதாகவும், எனவே தொடர்ந்து ஆன்மீக புத்தகங்களை படிக்கக்கூடிய வழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

 

இதனை அடுத்து இவர் மிகவும் சகிப்புத் தன்மையுள்ள மனிதராகவும் சிறந்த மனநிலையில் திரும்பிய பிறகு இங்கிலாந்து திரும்பு இருக்கிறார். இவருடைய சிறந்த அறிவை அறிந்து கொண்ட ஜெர்மனியில் இருக்கக்கூடிய கோடிங்கன் பல்கலைக்கழகமானது இவரை அங்கு படிக்க அழைத்தது.

 

இது இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி தந்ததோடு பி ஹெச் டி மற்றும் முதுகலை உதவித்தொகையை அந்த ஆண்டு பெற்று இயற்பியலில் தனது ஆர்வத்தால் மிகச்சிறந்த நிலைக்கு வந்தார். இதனை அடுத்து அமெரிக்காவுக்கு திரும்பி வந்த ஓப்பன் ஹெய்மர் கலிபோர்னியாவில் தனது இயற்பியல் பணிகளை தொடர்ந்து செய்தார்.

 

மேலும் இவர் தன்னை ஒரு கண்டிப்பான ஆசிரியராக வெளிப்படுத்தியதன் மூலம் தான் பிராஜெக்ட் Y திட்டத்தில் பணியாற்ற கூடிய வாய்ப்பு கிடைத்து.இதன் மூலம் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்றார்.

 

அந்த சமயத்தில் அதாவது 1930 பிற்பகுதியில் ஏராளமான புத்தகங்களை படித்த இவர் ஒரு காலகட்டத்தில் இந்து வேதங்களை தேடிப்பார்த்து படித்தார். மொழிபெயர்க்கப்படாத பகவத் கீதையை படிப்பதற்காகவே சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொண்டார்.

 

இதனை அடுத்து  வெடிகுண்டு வெடித்த சமயத்தில் இவர் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? “இப்போது நான் உலகங்களை அழிக்கும் காலன் ஆகிவிட்டேன்” என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். இந்த வார்த்தையை மகாபாரத போரின் சமயத்தில் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசம் செய்த வார்த்தைகள் ஆகும்.

 

அதுமட்டுமல்லாமல் 1932ல் தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் ஓப்பன் ஹெய்மரையை குறிப்பாக குறிப்பிட்டு இந்த தத்துவத்தை நடைமுறைப்படுவதற்கான வாய்ப்பை வழங்க, ஒரு சூழ்நிலையாக போரை உதாரணமாக காட்டி இருக்கிறார்.

 

மேலும் போரினால் மட்டும் அமைதியை எட்ட முடியாது. ஒழுக்கத்தினால் மட்டுமே அமைதியை எட்ட முடியும் என்று அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார். எனவே ஒழுக்கத்தை தூண்டக்கூடிய விஷயங்களை படித்தால் மட்டும்தான் அமைதியை உணர முடியும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

ஜப்பானிய போருக்குப் பிறகு ஓபன் செய்முறை அணுகுமுறை முற்றிலும் மாறியது. அணு ஆயுதங்களை ஆக்கிரமிக்கும் பயங்கரம் என்று அவர் விமர்சித்ததோடு ஆயுதம் தயாரிக்கும் தொழிலை பிசாசின் வேலை என்று விமர்சித்தார்.

 

அது இல்லாமல் தான் ப்ராஜெக்ட் Yயில் பங்கேற்ற காரணத்தினால் அவர் கையில் ரத்தம் இருப்பதாக உணர்வதாகவும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

 

மேலும் ஓப்பன் ஹெய்மர் பகவத் கீதையில் இளவரசர் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கூறிய உபதேசமான சிலவற்றை கூறியிருக்கிறார். அது ஒரு சூழ்நிலையில் அர்ஜுனன் சண்டையிட மறுக்க, அப்போது கண்ணன் அர்ஜுனனின் மன சுமையை நீக்க மனிதர்கள்  அனைவரையும் கொல்பவன் நான் தான். நீ கொலை செய்யும் கருவியாக மட்டுமே இருக்கிறாய் அர்ஜுனா.. எனவே வெற்றி, புகழ், மகிழ்ச்சி இவற்றின் மீது கவனத்தை செலுத்து என்று கண்ணன் கூறியதை நினைவுபடுத்தி இருக்கிறார்.

Oppenheimer
Oppenheimer

இதன் மூலம் இவர் ப்ராஜெக்ட் Y யில் இடம் பெற்றிருந்ததனை ஒரு அர்ஜுனனை போல அவர் ஒருவகப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்க அரசு இவர் மீது சந்தேகம் கொண்டது. எனினும் அவர் இறந்து 54 களுக்குப் பிறகு 2022 இல் அமெரிக்க அரசு 1954 இல் அவருக்கு எதிராக மேற்கொண்ட சில திட்டங்களை ரத்து செய்தது.

 

இதன் மூலம் இவர் அமெரிக்காவின் விசுவாசி என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். எது நடக்கிறதோ.. அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதையின் கொள்கைக்கு ஏற்ப இவரது சுயசரிதை உள்ளது என்று கூறலாம்.

 

ஓப்பன் ஹெய்மர் இளமைப்பருவத்தில் இருந்தே புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டு இருந்ததால் இவர் வாழ்நாளின் கடைசி பகுதியில் காசு நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 1967இல் தொண்டைப் புற்றுநோய் பாதிப்பால் இறைவனடி சேர்ந்தார். இவர் உயிர் இழக்கும் போது அவரது வயது 62 ஆக இருந்தது.

 

இவரது பாணியில் அறிவியல் என்பது மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்க கற்றுக் கொள்ளக்கூடிய தொழில் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் இந்த உலகில் மனித நேயம் வளர்ந்து போர் குற்றங்கள் குறையும்.

 

மனித இனத்தை மனித இனமே அழிக்க எதற்காக இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்ற கேள்வியை இவர் கேட்காமல் கேட்டிருக்கிறார்.

 

இதற்குக் காரணம் சமஸ்கிருத புத்தகங்களை அதிகமாக படித்ததும், நமது கலாச்சாரத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய மறப்போம், மன்னிப்போம்.. என்ற தத்துவத்தை இவர் புரிந்து கொண்டதால் தான் தான் செய்த தவறை உணர்ந்து கைகளில் ரத்தம் உள்ளது என்பதை சிம்பாலிக்காக காட்டி இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

 

இப்போது சொல்லுங்கள் கீதையின் சாரம்சம் இவரது வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி இருக்கிறது என்று…